அடடா என்னமா ஆடறீங்க, சான்சே இல்லை... வளைந்து நெளிந்த ரெஜினா... வசமாய் பாராட்டிய மெகா ஸ்டார்

By

ஐதராபாத்: தனது நடனத்தை மெகா ஸ்டார் சிரஞ்சீவி புகழ்ந்துள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ரெஜினா.

பாண்டிராஜ் இயக்கிய, கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தெலுங்கு நடிகை ரெஜினா. இந்த படம் ஹிட்டானது.

Recommended Video

சமூக வலைத்தளத்தில் போட்டி அறிவித்த பிரபல நடிகை

தொடர்ந்து ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் சிலுக்குவார்பட்டி சிங்கம் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

கள்ளபார்ட், கசடதபற

கள்ளபார்ட், கசடதபற

இப்போது, ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த் சாமி ஜோடியாக, கள்ளபார்ட், சிம்புதேவன் இயக்கும் கசடதபற படங்களில் நடித்துள்ளார். அடுத்து திருடன் போலீஸ் படத்தை இயக்கிய கார்த்திக் ராஜூவின் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதில் மற்றொரு ஹீரோயினாக அக்‌ஷரா கவுடா நடிக்கிறார்.

சிரஞ்சீவி 152

சிரஞ்சீவி 152

இதற்கிடையே தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 152 வது படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார் ரெஜினா காஸன்ட்ரா. கொரட்டலா சிவா இயக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதில் த்ரிஷா ஹீரோயினாக நடிக்கிறார் என்று தெரிகிறது. படக்குழு இதுபற்றி இன்னும் அறிவிக்கவில்லை.

சிறப்பா ஆடறீங்களே

சிறப்பா ஆடறீங்களே

கிராமத்து ஸ்டைல் குத்துப்பாடலான இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. இதில் நடிகை ரெஜினா, சிரஞ்சீவியுடன் இணைந்து ஆடினார். ஷூட்டிங் முடிந்ததும், ரெஜினாவை புகழ்ந்துள்ளார் சிரஞ்சீவி. ஏற்கனவே டான்சில் மிரட்டுவார் மெகா ஸ்டார். அவரே, இவ்வளவு சிறப்பா ஆடறீங்களே என்று புகழ்ந்ததை நினைத்து மகிழ்ச்சியானார் ரெஜினா.

நடன வாய்ப்பு

நடன வாய்ப்பு

நடிகை ரெஜினா, தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். இருந்தாலும் அந்தப் படங்களில் அவருடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் சிறப்பான வாய்ப்புகள் அமையவில்லை என்று கூறப்படுகிறது. அந்த குறையை இந்தப் படம் தீர்க்கும் என்றும் இந்தப் படத்தில் ரெஜினாவின் நடனம் பேசப்படும் என்றும் படக்குழுத் தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X