twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் சினிமாவின் அழகு ப்ளஸ் அசத்தல் அம்மாக்கள்

    By Mayura Akilan
    |

    தமிழ் சினிமாவில் அம்மா சென்டிமென்ட் இல்லாமல் படமே இல்லை என்ற அளவிற்கு போட்டு தாக்கினார்கள். அம்மாவிற்கு தனி பாடல். அம்மாவின் மரணம், அம்மாவின் சோகம் என எல்லா படத்திலும் அம்மாவிற்கு தனி ட்ராக் உண்டு.

    90களில் கூட ரஜினி, கமல் படங்களில் அம்மா சென்டிமென்ட் அதிகம் இருந்தது. நாளடைவில் மெல்ல மெல்ல குறைந்து இப்போது அம்மா சென்ட்மென்ட் இல்லாமலும் படம் எடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

    அன்னையர் தினம் கொண்டாடிய இந்த நேரத்தில், சினிமா நூற்றாண்டு கொண்டாப்படுவதன் முக்கிய அம்சமாக இந்த நேரத்தில் அம்மா கதாபாத்திரத்தில் அசத்திய நடிகைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.

    எஸ்.என்.லட்சுமி

    எஸ்.என்.லட்சுமி

    சிறு வயதில் இருந்தே அம்மா கதாபாத்திரம் ஏற்று நடித்தவர் எஸ்.என்.லட்சுமி. எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் அம்மாவாக நடிக்கத் தொடங்கி தனுஷ் காலத்தில் பாட்டியாக நடித்த எஸ்.என்.லட்சுமி சமீபத்தில்தான் மரணமடைந்தார்.

    கண்ணாம்பா, அஞ்சலிதேவி

    கண்ணாம்பா, அஞ்சலிதேவி

    சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களில் அம்மாவாக நடித்தவர் கண்ணாம்பா. ‘மனோகரா பொறுத்தது போதும் பொங்கி எழு' என்று கூறி வீரத்தை ஊட்டிய தாய் கண்ணாம்பா. இவரது குரலுக்கு அந்த காலத்தில் தனிரசிகர் வட்டமே உண்டு. கதாநாயகியாக நடித்து அம்மாவாக உயர்ந்தவர் நடிகை அஞ்சலிதேவி. அந்த காலத்திலேயே அழகு அம்மா என்று பெயரெடுத்தவர். பிழிய பிழிய அழுவார்.

    பண்டரிபாய், விஜயகுமாரி

    பண்டரிபாய், விஜயகுமாரி

    பராசக்தி படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் பண்டரிபாய், பின்னர் அவரே சிவாஜிக்கும், எம்.ஜி.ஆருக்கும் அம்மாவாக நடித்தார். பழம்பெரும் நடிகை விஜயகுமாரியும் கதாநாயகியாக நடித்து பின்னர் அம்மாவாக நடித்தவர்.

    கே.ஆர்.விஜயா, லட்சுமி

    கே.ஆர்.விஜயா, லட்சுமி

    புன்னகை அரசி என்று பெயரெடுத்த கே.ஆர்.விஜயா சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினிகணேசன் போன்ற கதாநாயகர்களின் ஜோடியாக நடித்தார். நாளடைவில் அம்மா கதாபாத்திரத்தில் அவரைப் போல யாரும் நடிக்க முடியாது என்ற அளவிற்கு பெயரெடுத்தார்.

    நடிகை சௌகார் ஜானகியும் அம்மா கதாபாத்திரத்தில் அசத்திய நடிகைதான். அந்த காலத்தில் இளம் நாயகிகளாக நடித்த லட்சுமி, மஞ்சுளா போன்ற நாயகிகள் கூட ஒருகாலத்தில் அம்மாவாக நடித்து புகழ் பெற்றனர்.

    ராதிகா

    ராதிகா

    80களில் கதாநாயகிகளாக வலம் வந்த நடிகை ராதிகா பின்னர் இளம் கதாநாயகர்களின் அம்மாவாக நடித்துவருகிறார். மூத்த நடிகர்கள் மூன்று கதாபாத்திரங்களில் நடித்தால் அதில் அப்பா கதாபாத்திரத்தின் ஜோடியாக நடிப்பார் ராதிகா

    சரண்யா பொன்வண்ணன்

    சரண்யா பொன்வண்ணன்

    நாயகன் படத்தில் கமல் ஜோடியாக அறிமுகமானவர் சரண்யா பொன்வண்ணன். பின்னர் சில காலம் திரைத்துறையை விட்டு ஒதுங்கியிருந்தார். இன்றைக்கு இளம் கதாநாயகர்களின் அம்மா என்றால் இயக்குநர்களின் முதல்சாய்ஸ் சரண்யா பொன்வண்ணன்தான். தேசிய விருது வாங்கியிருக்கிறார்.

    ஐஸ்வர்யா

    ஐஸ்வர்யா

    லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவிற்கு என்றே சில கதாபாத்திரங்களை வைத்திருக்கின்றனர் இயக்குநர்கள். பணக்கார, திமிர்தனமான அம்மா என்றால் கூப்பிடு ஐஸ்வர்யாவை என்கின்றனர்.

    குஷ்பு

    குஷ்பு

    90களில் இளசுகளின் இதயங்களைக் கவர்ந்தவர் குஷ்பு. இன்றைக்கு அவரும் அழகு அம்மாவாக நடிக்கிறார்.

    ரோஜா

    ரோஜா

    கறுப்பாக இருந்தாலும், களையாகவும், அழகாகவும் நடித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் அசத்தியவர் ரோஜா. இன்றைக்கு இளம் கதாநாயகிகளின் அழகு அம்மா இவர்தான்.

    லட்சுமி ராமகிருஷ்ணன்

    லட்சுமி ராமகிருஷ்ணன்

    நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அழகு அம்மாவாக இன்றைக்கு அறியப்பட்டிருக்கிறார். ‘நாடோடிகள்' தொடங்கி ‘சென்னையில் ஒருநாள் வரை' அழகான, அறிவுப்பூர்வமான அம்மாவாகவும் நடித்துவருகிறார்.

    English summary
    Let's not try and imagine what Kollywood would be like without the mothers. This Mother's Day, let us celebrate the stereotypes of the Cine-Ma
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X