கேன்ஸ் திரைப்பட விழாவில் ட்ரான்ஸ்பரென்ட் உடையில் ஸ்ருதி ஹாசன்.. லைக்குகளை அள்ளும் புகைப்படம்!

சென்னை : நடிகை ஸ்ருதி ஹாசன் கேன்ஸ் திரைப்பட விழாவில் ட்ரான்ஸ்பரென்ட் உடையில் கேட் வாக் செய்த புகைப்படம் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

76வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் கேன்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

மே 17ந் தேதி தொடங்கிய இந்த விழா 27 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

cinema actress shruti haasan in cannes film festival

கேன்ஸ் திரைப்பட விழா : இந்த விழாவில் 600க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தியாவின் சார்பில் மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணை அமைச்சர் முருகன் தலைமையிலான 11 பேர் கொண்டகுழு கேன்ஸ் திரைப்படவில் பங்கேற்றனர். இதில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் வேட்டி சட்டையில் கலந்து கொண்டார்.

முன்னணி நடிகைகள் : இந்த விழாவில் நடிகை சாரா அலிகான் கோல்டன் நிற லெஹங்கா அணிந்திருந்தார். அதே போல, முன்னாள் உலக அழகியான மனுஷி சில்லரும் ஃபேஷன் டிசைனர் ஃபோவாரி வடிவமைத்த வெள்ளை நிற கவுனை அணிந்திருந்தார். ஊர்வசி ரவுதெல்லா, பிங்க் கவுன் அணிந்திருந்தார். அந்த உடைக்கு ஏற்றவாறு ஊர்வசி ரவுதெல்லா கழுத்தில் அணிந்திருந்த முதலை நெக்லஸ் அனைவரையும் கவர்ந்து டிரெண்டிங் ஆனது.

cinema actress shruti haasan in cannes film festival

பாரம்பரிய உடையில் குஷ்பு : ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், சோனம் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இயக்குநர் விக்னேஷ் சிவனும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.அதே போல நடிகை குஷ்பு காஞ்சிபுரம் பட்டுச் சேலையுடன் பாரம்பரியமான புடவையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

ஸ்ருதி ஹாசன் : இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு ட்ரான்ஸ்பரென்ட் உடையில் கலந்து கொண்டார். கறுப்பு நிற உடையில் ஒய்யாரமாக பூனை நடைபோட்டு வந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி பல லட்சம் லைக்குளை குவித்து வருகிறது. ஸ்ருதியின் தீவிர ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு தங்களின் இதயத்தை பரிசாக அளித்துள்ளனர்.

cinema actress shruti haasan in cannes film festival

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X