twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமா கற்பனைதான்.. அதை ஃபாலோ பண்ணாதீங்க.. சீரியஸா எடுத்துக்காதீங்க.. மாணவிகள் மத்தியில் திரிஷா!

    |

    Recommended Video

    Trisha Speech about Nerkonda parvai Movie | UNICEF

    சென்னை: சினிமா என்பது கற்பனைதான் அதனை பின்பற்ற கூடாது என நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.

    நடிகை திரிஷா 1999ஆம் ஆண்டு வெளியான ஜோடி படத்தில் சிறு வேடத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து 2002ஆம் ஆண்டு வெளியான மவுனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

    நடிகை திரிஷா 17 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார். திரிஷா யுனிசெஃப் அமைப்பின் தூதராகவும் உள்ளார்.

    திரிஷா பங்கேற்பு

    திரிஷா பங்கேற்பு

    இந்நிலையில் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் நடிகை திரிஷா கலந்துகொண்டார்.

    சீரியஸா எடுக்காதீங்க

    சீரியஸா எடுக்காதீங்க

    அப்போது பேசிய நடிகை திரிஷா, சினிமா என்பது கற்பனைதான். அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நான் ஒரு நடிகை. ஆனால் நிஜ வாழ்க்கையில் நடிப்பதில்லை. சினிமாவை பார்த்து பலர் பாதிக்கப்படுகிறார்கள்.

    தண்டிக்க வேண்டும்

    தண்டிக்க வேண்டும்

    பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான சட்டத்தை கொண்டு தண்டிக்க வேண்டும், அரபு நாடுகளில் உள்ளதை போல கடுமையான சட்டங்களை இங்கேயும் கொண்டு வரவேண்டும்.

    குழந்தைகளுக்கு துன்புறுத்தல்

    குழந்தைகளுக்கு துன்புறுத்தல்

    பெண்கள் தன்னம்பிக்கையுடன் தங்கள் லட்சியத்திற்காக போரடினால் நிச்சயம் வெற்றி பெற முடியும். குழந்தை பாலியில் துன்புறுத்தல்கள் , நம்பிக்கைக்குரிய குழந்தைகளுக்கு தெரிந்த நபரால் செய்யப்படுகின்றது. இவ்வாறு நடிகை திரிஷா தெரிவித்தார்.

    English summary
    Actress Trisha says Cinema is a imagination dont take it serious and dont follow Trisha said this in front of college students.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X