என் பாய் ஃபிரெண்ட்... லட்சுமி மேனன்
கும்கியில் அறிமுகமானாலும் லட்சுமி மேனனை சுந்தரபாண்டியன் படம்தான் ரசிகர்கள் முன்பு அறிமுகப்படுத்தியது.
கிராமத்துப் பெண்ணாய் பாவாடை தாவணியில் தொடங்கிய பயணம் குட்டிப்புலி, ஜிகர்தண்டா, பாண்டியநாடு என கைவசம் பல படங்களை தக்கவைத்தது.
சினிமாவில் ஹோம்லியாய் நடிக்கும் லட்சுமி மேனனை இன்றைய இளம் ரசிகர்கள் பலருக்கும் பிடித்திருக்கிறது. ஆனால் லட்சுமி மேனனுக்கு என்ன பிடிக்கும்? அதை அவரே சொல்கிறார் தெரிந்து கொள்ளுங்கள்

இசையின் காதலி
லட்சுமி மேனனுக்கு இசை ரொம்ப பிடிக்குமாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மென்மையான மெலடி பாடல்களைக் கேட்பாராம். கேட்பதோடு மட்டுமல்லாமல் பாடவும் செய்வாராம். கதை புத்தகங்கள், நாவல்கள் அதிகம் படிப்பாராம். புத்தகத்தின் காதலி என்கிறார்.

மழையில் நனைவது..
மழை பெய்யும் நேரத்தில் வெளியே வந்து நனைந்து கொண்டே நடனமாடுவாராம். மழை பெய்யும் போது எழும் மண்வாசனை ரொம்ப பிடிக்குமாம். மழை மீது தனி காதலே உண்டாம். (சூட்டிங்கில் எந்த டைரக்டராவது மழை சீன் வைங்கப்பா)

மணிக்கணக்கில் தூக்கம்
ஒரு நாளைக்கு பத்துமணி நேரம் தூங்குவாராம் அதிகாலை சூட்டிங் என்றால் தூக்கத்தை தியாகம் செய்யவேண்டுமே என்று வருத்தப்படுவாராம் லட்சுமி. (ரொம்ப தூங்கினா குண்டாயிடுவீங்களே)

சினிமாவின் காதலி
அதிகமாக சினிமா பார்ப்பாராம். சினிமாவைத்தான் அதிகம் காதலிக்கிறேன். என்னுடைய முதல் பாய்ஃப்ரெண்ட் என்கிறார். (கிரேட் எஸ்கேப்)

உயரமான பெண்
பள்ளியில் படிக்கும் போது இவர்தான் உயரமான பெண்ணாம். ( இப்போவும் ப்ளஸ் ஒன்தானே படிக்கிறார்) அதனால் இவருடன் படித்த பாய்ஃபிரெண்ட்ஸ் எல்லாம் லட்சுமியை விட குட்டையானவர்களாம். பள்ளியில் ராகிங் செய்த அனுபவம் வேறு உண்டாம்.

கௌதம்தான் ஃப்ரெண்ட்லி
சசிகுமார், விக்ரம் பிரபு, விமல், சித்தார்த், விஷால் என பல ஹீரோக்களுடன் நடித்தாலும் கௌதம் கார்த்திக்தான் ரொம்ப ஃப்ரெண்ட்லியானவராம்.


Click it and Unblock the Notifications











