»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை ரதியின் அப்பா பெயர் ஆறுமுகம். சொந்த ஊரு தமிழ்நாடு. வசிப்பது பெங்களூரில்.

தேவயானி, 2 ஆண்டுகளுக்கு குவா குவா சமாசாரத்தை ஒத்தி வைத்திருக்கிறாராம். அவரது மாமியார் இன்னும் இட்லிக் கடை வைத்துத்தான் வாழ்க்கையை நடத்தி வருகிறாராம். குருவம்மா படத்தில் சொந்தக் குரலில் பேசியிருக்கிறார் தேவயானி. ரொம்பக் கஷ்டப்பட்டு மெட்ராஸ் பாஷை பேசினாராம்.

பானுப்பிரியா கர்ப்பமாக இருக்கிறார். இப்போது இருப்பது கணவருடன் அமெரிக்காவில் கலிபோர்னியாவில். 6 மாத கர்ப்பமாம்.

கோவை சரளாவும், வடிவேலுவும் பேசிக் கொள்வதில்லை என்பது பழைய சேதி. கொஞ்ச நாளைக்கு முன் இருவரும் "கெட்ட" வார்த்தைகளால் திட்டி சண்டை போட்டுக் கொண்டார்கள் என்பது ரொம்ப லேட்டஸ்ட் செய்தி. என் மன வானில் படத்தில் பெண் வேடம் பூண்டதோடு மட்டுமல்லாமல், கூனியாகவும் நடித்துக் கலக்கியுள்ளார் வடிவேலு.

ரொம்ப ஓவராக யாரையும் கிண்டல் செய்து காமடி பண்ணாதீர்கள் என்று விவேக்கிடம் முக்கியஸ்தர் ஒருவர் சமீபத்தில் அறிவுரை செய்தாராம். அதனால் தனது சமூகத் திட்டுகளை குறைத்துக் கொள்ள விவேக் முடிவு செய்துள்ளாராம்.

தமிழ் நடிகர்களை விமர்சித்து பேசி வரும் மலையாள நடிகை சம்யுக்தா வர்மாவுக்கு தமிழில் படங்கள் ஏதும் தர வேண்டாம் என்று ஒரு குரூப் ரகசிய பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் கதை கிட்டத்தட்ட ரஜினி லெவலுக்கு இருக்குமாம். அந்தப் படத்தின் மூலம் அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான் என்பதை பகிரங்கமாக அவர் அனவுன்ஸ் செய்யவுள்ளாராம்.

மாதவன் நடிக்கும் அடுத்த படத்திற்கு கள்ளச் சிரிப்பழகா என்று டைட்டில் வைத்துள்ளார்கள்.

கமல் ஸ்டைலில் வித்தியாசமான பாணியில் ஒரு படம் எடுக்க நாசர் திட்டமிட்டு வருகிறாராம். இதற்காக மேக்கப் டெஸ்ட் எல்லாம் கூட பார்த்தாகி விட்டதாம்.

மலேசியா மற்றும் சிங்கப்பூர் கலை நிகழ்ச்சியில் பல நடிகைகள் மிக உற்சாகமாக திரிந்தார்கள். எல்லாம் உற்சாக பானங்களின் மகிமைதான்.

ஆளவந்தானில் கமலுடன் சேர்ந்து நடித்த டிவி நடிகர் ரியாஸ் கான், வித்தகன் என்ற படத்தில் முழு நீள ஹீரோவாக நடிக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil