படிக்கிற பையன் பண்ணுற வேலையா இது.. சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய மாணவன் கைது

சென்னை: பிக் பாஸ் பிரபலம் நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய வழக்கில் திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

Recommended Video

Sanam Shetty கொடுத்த புகாரால் கைதான College Student | Cyber Crime Police

தனது வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை மர்ம நபர் ஒருவர் அனுப்பி தொல்லை கொடுத்து வருவதாக நடிகை சனம் ஷெட்டி அடையாறு சைபர் கிரைமில் புகார் அளித்திருந்தார்.

நடிகை சனம் ஷெட்டி அளித்த தகவலை கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் கல்லூரி மாணவர் ஒருவர் சிக்கி உள்ளார்.

வாட்ஸ்அப்பில் டார்ச்சர்

வாட்ஸ்அப்பில் டார்ச்சர்

நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான சனம் ஷெட்டிக்கு தொடர்ந்து வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கெட்ட கெட்ட வார்த்தைகள் அடங்கிய ஆபாச மெசேஜ்கள் வருவதாக அடையாறு சைபர் கிரைமில் புகார் அளித்திருந்தார்.

கல்லூரி மாணவன்

கல்லூரி மாணவன்

நடிகை சனம் ஷெட்டிக்கு வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பிய ஐடி மற்றும் போன் நம்பரை வைத்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவன் ராய் ஜான்பால் சிக்கியுள்ளார்.

அதிரடி கைது

அதிரடி கைது

நடிகைக்கு ஆன்லைனில் ஆபாச மெசேஜ்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்தது கல்லூரி மாணவன் என்பது பெரும் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. கல்லூரி மாணவன் ராய் ஜான்பாலை அடையாறு சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடும் நடவடிக்கை

கடும் நடவடிக்கை

சமூக வலைதளங்களை சரியாக பயன்படுத்தாமல் இப்படி பொறுப்பற்ற முறையில் பயன்படுத்தத் தொடங்கினால் அவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆபாசமாக பேசி வரும் பலர் மீது அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சனம் நிம்மதி

சனம் நிம்மதி

சமூக வலைதளங்களில் தொடர்ந்து வந்த ஆபாச மெசேஜ்களால் மனதளவில் உடைந்து போயிருந்த சனம் ஷெட்டிக்கு இந்த கைது நடவடிக்கை நிம்மதியை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. என்ன காரணத்திற்காக சனம் ஷெட்டிக்கு இப்படி ஆபாச மெசேஜ்களை கல்லூரி மாணவர் அனுப்பினார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X