லாக்டவுன் நேரத்தில் பெண்களை துன்புறுத்தினால்.. பயமின்றி புகார் தரலாம்.. வரலட்சுமி அட்வைஸ் !
சென்னை: ஊரடங்கு காலத்தில் வீட்டில் உள்ள பெண்களை துன்புறுத்தினால் பெண்கள் தாராளமாக முன் வந்து புகார் கொடுக்கலாம் என்று வரலட்சுமி சரத்குமார் அறிவுரை கூறியுள்ளார்.
Recommended Video
பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்று சொல்வார்கள்.வீட்டுக்குள் முடங்கி கொண்டிருந்த பெண்கள் தற்போது ஆணுக்கு இணையாக வளர்ந்து வருகிறார்கள். எனினும், பல இடங்களில் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்து கொண்டுத்தான் இருக்கிறது.

பெண்கள் குறித்து எப்பொழுதும் அக்கறை காட்டுபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். தார தப்பட்டை திரைப்படம் மூலம் தான் ஒரு மிகப் பெரிய நடிகை என நிரூபித்தவர் வரலட்சுமி. சிம்பு, விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி இடம் பிடித்தவர்.

இதனிடையில் தான் பேசிய வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, பல பெண்கள் இந்த லாக் டவுன் நேரத்தில் டொமஸ்டிக் அபுயூஸ் அதாவது வீட்டு கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். பல பெண்கள் வழி தெரியாமல் இருக்கின்றனர். வீட்டிலேயே மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர் என கூறியுள்ளார்.

வீட்டில் உள்ள பெண்களை யாராவது துன்புறுத்தினால் பெண்கள் தாராளமாக புகார் தரலாம். 1 800 102 7282 என்ற எண்ணை அழைத்தால் நிச்சயம் அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள் என்றார். இந்த நம்பரை உங்களுக்கு தெரிந்த பெண்களுக்கு கொடுங்கள், இந்த எண்ணை அவர்களுக்கு தரும் போது ரகசியமாக கொடுங்கள் ஏனென்றால் அவர்களும் இந்த கொடுமையை அனுபவித்து கொண்டு இருக்கலாம் என்று கூறி தன் வீடியோவை முடித்துள்ளார் வரலட்சுமி.

பெண்கள் மீது எப்போதும் அக்கறை கொண்ட வரலட்சுமி வெளியிட்டுள்ள இந்த காணொளி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஏன் என்றால், இந்த ஊரடங்கு நேரத்தில் பல பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு இது பெரிய ஆறுதலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











