நள்ளிரவு பார்ட்டியில் அடிதடி... தயாரிப்பாளர் மீது பீர் பாட்டில் தாக்குதல்... ஹீரோயின் மீது புகார்
சென்னை: நள்ளிரவு பார்ட்டியில் தன்னை பீர் பாட்டிலால் தாக்கியதாக, நடிகை சஞ்சனா கல்ராணி மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழில் பாக்சர், போடா முண்டம் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்துவருபவர் சஞ்சனா கல்ராணி.
கன்னடத்தில் முன்னணி நடிகையான இவர், தெலுங்கு, இந்தியிலும் நடித்துவருகிறார். தமிழில் ஹீரோயினாக நடித்துவரும் நிக்கி கல்ராணியின் உடன் பிறந்த சகோதரி இவர்.

நள்ளிரவு பார்ட்டி
இவர் பெங்களூரில் நடந்த பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அங்கு தயாரிப்பாளர் வந்தனா ஜெயின் என்பவரும் வந்திருந்தார். அனைவரும் மது அருந்தியதாகத் தெரிகிறது. அப்போது வந்தனா ஜெயினுக்கும் சஞ்சனாவுக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது.

பீர் பாட்டில்
இதையடுத்து, அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து சஞ்சானா, தயாரிப்பாளரைத் தாக்கினாராம். இதனால் அவருக்கு காயம் ஏறட்டதாம். பின்னர் அங்கிருந்த மற்ற நடிகர், நடிகைகள் சண்டையை விலக்கி விட்டதாகக் கூறப்படுகிறது.

கொலை மிரட்டல்
இந்த சம்பவம் கடந்த 24 ஆம் தேதி நடந்தது. இந்நிலையில் நடிகை சஞ்சனா தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, பெங்களூர் கப்பான் பார்க் போலீசில் நேற்று முன் தினம் புகார் செய்துள்ளார் தயாரிப்பாளர்.

தாக்கினாரா?
இதுபற்றி நடிகை சஞ்சனா கூறும்போது, பார்ட்டியில் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது உண்மை. ஆனால், உடல் ரீதியாக யாரும் தாக்கிக்கொள்ளவில்லை. நான் யாரையும் தாக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











