»   »  'கன்பர்ம்ட்', அஜீத்துக்கு ஸ்ருதி தான் ஜோடி: படத்தலைப்பு அச்சமில்லை?

'கன்பர்ம்ட்', அஜீத்துக்கு ஸ்ருதி தான் ஜோடி: படத்தலைப்பு அச்சமில்லை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்க உள்ள படத்தின் ஹீரோயின் ஸ்ருதி ஹாஸன் என்பது உறுதியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார் அஜீத். அந்த படத்தின் துவக்க விழா வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி நடக்க உள்ளது. அஜீத் தற்போது குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இந்நிலையில் சிவா தனது படத்தின் ஹீரோயினை தேர்வு செய்துவிட்டார்.

ஸ்ருதி ஹாஸன்

ஸ்ருதி ஹாஸன்

அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாஸனை தேர்வு செய்துள்ளார் சிவா. ஸ்ருதியின் மார்க்கெட் சூப்பராக உள்ளதால் அவரை நடிக்க வைக்க அஜீத்தும், படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னமும் ஒப்புதல் வழங்கிவிட்டார்களாம்.

தெலுங்கு

தெலுங்கு

சிவா தான் எடுக்கும் தமிழ் படங்களை தெலுங்கிலும் வெளியிட்டு வருகிறார். ஸ்ருதிக்கு தமிழ் தவிர தெலுங்கு திரை உலகிலும் கிராக்கி அதிகம் என்பதால் அவரை தேர்வு செய்துள்ளார்.

தமன்னா

தமன்னா

முன்னதாக அஜீத்துக்கு ஜோடியாக தமன்னாவை நடிக்க வைக்க நினைத்தாராம் சிவா. ஆனால் தமன்னாவின் மார்க்கெட் சரிந்துள்ளதால் அவரை தேர்வு செய்யவில்லையாம்.

அச்சமில்லை?

அச்சமில்லை?

சிவா தான் அஜீத்தை மீண்டும் இயக்கும் படத்திற்கு அச்சமில்லை என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளாராம்.

English summary
Siruthai Siva has selected Shruti Haasan for his upcoming movie starring Ajith. Buzz is that Siva has decided to name the movie as Acchamillai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil