திடீரென விலகினார் த்ரிஷா.. மெகாஸ்டார் படத்தில் காஜல் அகர்வால் நடிப்பது உறுதி.. அவரே சொல்லிட்டாரே!
ஐதராபாத்: நடிகை த்ரிஷா விலகிய படத்தில் தான் நடிக்க இருப்பதாக காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. தமிழ் தவிர, தெலுங்கு மலையாளப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக ராம் படத்தில் நடித்து வருகிறார்.

ஆச்சார்யா
இவர், தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் 'ஆச்சார்யா' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார். இந்தப் படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார். இதில் நடிகை ரெஜினா ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில், அவர் மகன் ராம்சரண் நடிபபதாகக் கூறப்படுகிறது. அவர் ஜோடியாக, இன்னொரு ஹீரோயின் நடிக்க இருக்கிறார்.

த்ரிஷா விலகல்
இதில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த த்ரிஷா, சமீபத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக இருந்தது. இந்தப் படத்தின் மூலம் 5 வருடத்துக்குப் பிறகு அவர், தெலுங்கு சினிமாவுக்கு வர இருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தில் இருந்து, தான் விலகிவிட்டதாக, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து இருந்தார், நடிகை த்ரிஷா. இது பரப்பானது.

விரைவில் சந்திக்கிறேன்
இதுபற்றி, 'படைப்பு ரீதியான வேறுபாடு காரணமாக, சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகி கொள்கிறேன். அந்தப் படக்குழுவுக்கு வாழ்த்துகள். சிறந்த படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களை விரைவில் சந்திக்கிறேன் என்று அவர் தெரிவித்து இருந்தார். இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயின் நடிப்பதும் அவருக்கு முக்கியத்துவம் இருப்பதும்தான் த்ரிஷா விலகியதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
காஜல் அகர்வால்
இதையடுத்து வேறு ஹீரோயினைத் தேடி வந்தனர். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலிடம் பேசி வந்தனர். அவர் அதிக சம்பளம் கேட்டதாகவும் அதனால் படக்குழு தயங்கியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் காஜல் அகர்வால் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகை காஜல் அகர்வால், தான் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படத்தில் நடிக்க இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஹே சினாமிகா
இந்தப் படத்துடன், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் மும்பை சாகா என்ற படத்தில் நடித்துள்ளார். நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா படத்திலும் நடித்து வருகிறார். இதில் துல்கர் சல்மான் ஹீரோ. இன்னொரு ஹீரோயினாக அதிதி ராவ் ஹைதாரி நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











