புற்றுநோயில் சிக்கிய நடிகைகள்….

By Mayura Akilan

பிரபல நடிகைகள் மம்தா, மனிஷா கொய்ராலா இருவரும் மீண்டும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என திரை உலகில் பிரபலமாக மின்னும் நட்சத்திரங்கள் சிலர் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகி அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து மரணத்தை தழுவியுள்ளனர்.

சில நடிகைகள் மட்டுமே விழிப்புணர்வோடு செயல்பட்டு அதிலிருந்து மீண்டுள்ளனர். புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள நடிகைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ஸ்ரீ வித்யா

ஸ்ரீ வித்யா

எழுபது, எண்பதுகளில் கதாநாயகியாக நடித்த ஸ்ரீ வித்யா பின்னர் அம்மா, அக்கா, அண்ணியாக நடித்து அசத்தியவர். மார்பகப் புற்றுநோய் தாக்கி 2006ம் ஆண்டு உயிரிழந்தார்.

கவுதமி

கவுதமி

ரஜினி, கமல் என பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகை கவுதமி. திருமணத்திற்குப் பின்னர் இவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டது. தன்னம்பிக்கையுடன் இதை எதிர்த்து போராடி வருகிறார்.

ஏஞ்சலீனா ஜோலி

ஏஞ்சலீனா ஜோலி

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலீனா ஜோலி மார்பகப் புற்றுநோய் தாக்குதலினால் தனது மார்பகத்தை இழந்துள்ளார். ஆனாலும் தன்னம்பிக்கை தளராமல் மீண்டும் அதே ஆக்சன் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

மம்தா மோகன்தாஸ்

மம்தா மோகன்தாஸ்

சிவப்பதிகாரம் படத்தில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். இவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் கேன்சர் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

மனீஷா கொய்ராலா

மனீஷா கொய்ராலா

இதேபோல் கர்ப்பப்பை கேன்சரால் பாதிக்கப்பட்டார் மனிஷா கொய்ராலா. அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு 2 மாதங்களுக்கு முன் மும்பை திரும்பினார். தற்போது அவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். மீண்டும் சிகிச்சைக்காக நியூயார்க் செல்ல உள்ளார்.

புற்றுநோய் விழிப்புணர்வு

புற்றுநோய் விழிப்புணர்வு

தற்போது புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள நடிகைகள் அனைவருமே அதைப்பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X