இன்று ஒரு முக்கியமான ஆளுக்கு பிறந்தநாள் தெரியுமா?
மும்பை: சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் நடிகை ஷெர்லின் சோப்ரா இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடினார்.
நடிகையும், மாடலுமான ஷெர்லின் சோப்ரா இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடினார். மிஸ் ஆந்திரா அழகிப் பட்டத்தை வென்ற ஷெர்லின் படங்களில் நடிக்கத் துவங்கினார். அவர் அவ்வப்போது நிர்வாணம், அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார். அவர் நடிப்பை விட இந்த நிர்வாண புகைப்படங்களுக்கு தான் பெயர் போனவர்.
இந்நிலையில் தான் அவர் பிளேபாய் பத்திரிக்கைக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்து பெரும் சர்ச்சையை கிளப்பினார். அந்த சர்ச்சை அடங்கும் முன்பே காமசூத்ரா 3டி படத்தில் நடித்தார். படப்பிடிப்பில் அவர் நிர்வாணமாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பலரையும் அதிர வைத்தது.
இப்படி எதற்கெடுத்தாலும் நிர்வாண போஸ் கொடுக்கும் அவர் தனக்கு வெட்கம் அதிகம் என்று வேறு பேட்டி கொடுத்துள்ளார். வெட்கத்திற்கு அவருக்கு அர்த்தம் தெரியவில்லை போன்று.
இப்படி ஏதாவது வில்லங்கமாக செய்து சர்ச்சையில் சிக்கும் ஷெர்லின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இது ரொம்ப முக்கியம் என்ற ரசிகர்களின் மைன்ட் வாய்ஸ் கேட்கிறது. என்ன பாஸ் செய்ய?


Click it and Unblock the Notifications












