Pavithra lakshmi: அடையாளமே தெரியாமல்.. எலும்பும் தோலுமாக மாறிய.. பவித்ரா லட்சுமி!
சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் பவித்ரா லட்சுமி. முன்னதாக மாடலிங் மூலம் இவர் புகழடைந்திருந்தாலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகர் புகழுடன் இணைந்து பவித்ரா செய்த சேட்டைகளால், ரசிகர்களுக்கு பிடித்தமானவராக மாறினார் பவித்ரா. தற்போது பவித்ரா, உடல் எடை மெலிந்து எலும்பும் தோலுமாக இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
நடிகையும் மாடலுமான பவித்ர லட்சுமி குக் வித் கோமாளியில் கலந்து கொண்ட போது, பார்ப்பதற்கே சும்மா அம்சமாக அழகாக இருப்பார். அந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நடிகை பவித்ரா லட்சுமி, யூகி, நாய் சேகர், ஜிகிரி தோஸ்து போன்ற படங்களில் நடித்து வந்தார். திடீரென பவித்ரா லட்சுமி உடல் எடை குறைந்ததைப்பார்த்த ரசிகர்கள் பதறிபோய் என்ன ஆச்சு என கேட்டு வந்தனர். இன்னும் சிலர், பவித்ரா பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார். அதனால் தான் இப்படி ஆகிவிட்டார் என்று பலவிதமான விமர்சனங்கள் பரவியது. அதற்குப் பதில் அளித்த நடிகை பவித்ரா லட்சுமி.

நடிகை பவித்ரா லட்சுமி: நான் சீரியஸான உடல்நலப் பிரச்னையில் இருக்கிறேன். தற்போது அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறேன். சிலர் என்னை நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்கள். உண்மையிலேயே என் மீது கரிசனமும், அன்பும் கொண்ட பலர் என்னைப் பற்றி விசாரித்தவர்களுக்கு நன்றி. என்னைப் பற்றி மீடியாக்களும், ஊடகங்களும் தவறான செய்திகளை தயவு செய்து பரப்ப வேண்டாம். எனக்கும் வாழ்க்கை இருக்கிறது என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். நானும் என்னுடைய எதிர்காலத்தை வழிநடத்த வேண்டும். வதந்திகளைப் பரப்பி என்னுடைய கடினமான சூழ்நிலையை மேலும் கடினமாக்கி விடாதீர்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் செய்யாத ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கும் செய்யாதீர்கள் என பதிவிட்டு இருந்தார்.
பவித்ராவிற்கு என்ன ஆச்சு: தற்போது, பவித்ரா லட்சுமி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எலும்பு தோலுமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலர் என்ன ஆச்சு பவித்ரா என்றும், உடலை கவனித்து கொள்ளுங்கள் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பவித்ரா உடலில் ஏதோ பிரச்சனை என்று சொல்லி இருந்தார் ஆனால், என்ன பிரச்சனை என்று சொல்லவில்லை. எது எப்படி இருந்தாலும், பவித்ரா லட்சுமி அதில் இருந்த மீண்டு வர வேண்டும்.


Click it and Unblock the Notifications











