ஹெல்மட் போடாமல் புல்லட் ஓட்டிய குக் வித் கோமாளி பிரபலம்.. பவித்ரா லக்‌ஷ்மி சொன்ன காரணத்தை கேளுங்க!

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை பவித்ரா லக்‌ஷ்மி ஹெல்மட் அணியாமல் புல்லட் பைக் ஓட்டிய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஏன் ஹெல்மட் அணியவில்லை என்கிற கேள்வியை எழுப்பி உள்ளனர்.

மேலும், ஹெல்மட் அணியாமல் வண்டியை ஓட்டியதற்காக பவித்ரா லக்‌ஷ்மிக்கு சென்னை போக்குவரத்து போலீஸார் ஃபைன் போட வேண்டும் என டேக் செய்து வருகின்றனர்.

Cook with Comali fame Pavithra Lakshmi rode bullet without helmet and shares video

சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆனவர் பவித்ரா லக்‌ஷ்மி. தொடர்ந்து படங்களில் இவர் நடித்து வருகிறார்.

நடிகை பவித்ரா லக்‌ஷ்மி: ஓ காதல் கண்மணி படத்தில் துல்கர் சல்மான் அலுவலக தோழியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் பவித்ரா லக்‌ஷ்மி. அதன் பின்னர் நாய் சேகர் படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மலையாளத்தில் வெளியான உல்லாசம், அதிர்ஷியம் படங்களில் நடித்த இவர் கதிர் நடிப்பில் வெளியான யுகி மற்றும் ஷாரிக் ஹாசன் நடித்து கடந்த ஆண்டு வெளியான ஜிகிரி தோஸ்த் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சதீஷுக்கு ஜோடி: ஏஜிஎஸ் தயாரிப்பில் கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் சதீஷ் நடித்த நாய் சேகர் படத்தில் அவருக்கு ஜோடியாக பவித்ரா லக்‌ஷ்மி நடித்திருந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு உடனடியாக அவருக்கு கிடைத்த ஜாக்பாட் என்றால் அது இந்த படம் தான். நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலு நடித்த நிலையில், இரு படங்களுக்கும் இடையே தலைப்பில் சில பிரச்சனைகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி: விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி சீசன் 1ல் போட்டியாளராக கலந்துக் கொண்ட பவித்ரா லட்சுமி 4வது ரன்னர் அப்பாக அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். பிரியா பவானி சங்கர், பரத், அசோக் செல்வன் நடித்த டைம் என்ன பாஸ் வெப்சீரிஸிலும் நடித்து ஓடிடியிலும் இவர் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

புல்லட் பைக்: ஆண்கள் ஓட்டும் பைக்கை ஓட்ட வேண்டும் என்பது எனது நெடுநாள் கனவு. ஆனால், என் நண்பர்கள், உறவினர்கள் என யாருமே எனக்கு பைக் ஓட்ட வராது என நினைத்து பைக்கை தரவே இல்லை. கற்றுக் கொடுக்கவும் இல்லை. ஆனால், நோமேட் பைக்கர்ஸ் கிளப் எனக்கு 3 நாட்களில் பைக் ஓட்ட கற்றுக் கொடுத்து விட்டனர். பெரிதாக சாதித்தது போல சந்தோஷமாக உள்ளது என பதிவிட்டுள்ளார். மேலும், பின்குறிப்பு என போட்டு பைக் ஓட்ட பயிற்சி எடுக்கும் போதும், பைக் ஓட்டும் போதும் ஹெல்மட் அணிந்து தான் ஓட்டினேன். இது ஒரு 10 நிமிட வீடியோவுக்காக ஹெல்மட் போடாமல் பைக் ஓட்டினேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஹெல்மட் போடல: பவித்ரா லக்‌ஷ்மியின் பைக் ஓட்டும் திறனை சில ரசிகர்கள் பாராட்டினாலும், பலரும் வீடியோவுக்காக இருந்தாலும் சாலையில் செல்லும் போது எப்படி ஹெல்மட் போடாமல் பைக் ஓட்டலாம். இது சட்டப்படி குற்றம் என சென்னை போக்குவரத்து துறையை டேக் செய்து இவர் மீது நடவடிக்கை எடுங்க பாஸ் என டேக் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X