’கூலி’ நாயகிக்கு ஹேப்பி பர்த்டே.. ஸ்ருதிஹாசன் 39 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா?
சென்னை: கமல்ஹாசனின் மகள் நடிகர் ரஜினிகாந்த் படமான கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் ஸ்ருதிஹாசனுக்கு சன் பிக்சர்ஸ் அட்டகாசமான பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
கமல்ஹாசனுக்கும் அவரது முன்னாள் மனைவி சரிகாவுக்கும் மகளாக 1986ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி பிறந்த ஸ்ருதிஹாசன் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்தியளவில் சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் ஸ்ருதிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூலி ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து தெரிவித்து வருகின்றனர்.

39 வயதில் நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ள நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்களை இங்கே காணலாம் வாங்க.
ஸ்ருதிஹாசன் பிறந்தநாள்: உலக நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசனின் மூத்த மகள் தான் ஸ்ருதிஹாசன். ஹேராம் படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக அப்பாவை போல தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ருதிஹாசன் வயது வந்த நிலையில், ஹீரோயினாக லக் எனும் இந்தி படத்தில் அறிமுகமானார். ஆனால், பாலிவுட்டில் அவருக்கு பெரிய ஹிட் கிடைக்கவில்லை. தமிழில் சூர்யாவுடன் இணைந்து நடித்த 7ஆம் அறிவு திரைப்படம் ஸ்ருதிஹாசனுக்கு பாராட்டுக்களை பெற்றுத் தந்தது. தொடர்ந்து விஜய், அஜித், தனுஷ், விஜய் சேதுபதி என டாப் ஹீரோக்களுடன் நடித்து வந்த ஸ்ருதிஹாசன் தற்போது ரஜினிகாந்தின் கூலி படத்தில் நடித்து வருகிறார். அவருடைய பிறந்தநாளை ரசிகர்கள் வாழ்த்து மழையுடன் கொண்டாடி வருகின்றனர்.

திருமணம் ஆகவில்லை: என்னோட கல்யாணத்துக்கு வந்து என்ன கரண்ட் பில் கட்டப் போறீங்களா என சமீபத்தில், திருமணம் குறித்த கேள்விக்கு காட்டமாக ஸ்ருதிஹாசன் பதிலளித்திருந்தார். இரண்டு முறை காதல் தோல்வியை சந்தித்த ஸ்ருதிஹாசன் பல தடைகளை தாண்டி நடிகையாக ரசிகர்களுக்காக தொடர்ந்து நடித்து வருகிறார்.

அவருக்கு எப்போதுமே ரசிகர்களின் அளவுகடந்த அன்பு கிடைத்து வருவதே அவருடைய பலமாக உள்ளது. பிரபாஸ் உடன் இணைந்து ஸ்ருதிஹாசன் நடித்த சலார் படம் தான் அவர் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வேட்டை படமாக உள்ளது. ரஜினிகாந்தின் கூலி படம் அதை முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சலார் 2 படமும் பெரிய சம்பவம் செய்யும் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை.

சொத்து மதிப்பு: நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் ஸ்ருதிஹாசனுக்கு சென்னை மற்றும் மும்பையில் சொகுசு பங்களாக்கள் இருப்பதாக கூறுகின்றனர். ஒரு படத்துக்கு 2 முதல் 3 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். அதிகபட்சமாக அவரிடம் 40 முதல் 45 கோடி வரை சொத்துக்கள் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். ரேஞ்ச் ரோவர், ஆடி Q7 உள்ளிட்ட சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார்.

கமல் பொண்ணு: அப்பா கமல்ஹாசனை போலவே அனைத்து கலைகளிலும் திறமை வாய்ந்தவர் தான் ஸ்ருதிஹாசன் என்பது திரைத்துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும். லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து ஆல்பம் பாடலில் நடித்த ஸ்ருதிஹாசன் கூடிய சீக்கிரமே அப்பா கமல்ஹாசனை போல படமும் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகின்றனர். கூலி, ட்ரெயின், சலார் 2 என கைவசம் பல படங்களை வைத்துள்ள ஸ்ருதிஹாசனுக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமையும் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை.



Click it and Unblock the Notifications











