என்னது.. நடிகை மீனாவுக்கு கொரோனாவா… ? அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு !

சென்னை : நடிகை மீனா கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் தொற்றால் சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

சமீபத்தில் கமல்ஹாசன்,வடிவேலு கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தனர்.

அதிகரிக்கும் கொரோனா

அதிகரிக்கும் கொரோனா

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அதிகரித்துவருகிறது. கடந்த அக்டோபர் மாதத்துக்குப்பின் தினசரி தொற்று 20 ஆயிரத்துக்குமேல் சென்றுள்ளது. இதில் கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் பரவலும் இருப்பதால் பரவல் அதிகரித்து வருகிறது.

ஞாயிறு ஊரடங்கு

ஞாயிறு ஊரடங்கு

இதனால் நாடு முழுவதும் மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மேற்கொண்ட ஆலோசனையில், தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கை அமல்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மீனாவுக்கு கொரோனா ?

மீனாவுக்கு கொரோனா ?

இந்நிலையில், நடிகை மீனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 2022 புத்தாண்டில் எங்க வீட்டுக்கு விருந்தாளியாக கொரோனா வந்துள்ளதாகவும், அது என் குடும்பத்தை விட்டுவைக்கவில்லை, ஆனால் நான் அதை அப்படியே விடமாட்டேன்.மக்களே ஜாக்கிரதையாகவும், பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள் என்றும், உங்கள் பிரார்த்தனை எங்களை காப்பாற்றும் என்று பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Meena Sagar மகள் Nainika Birthday Celebration | Rajinikanth, Annathe
வீட்டில் தனிமை

வீட்டில் தனிமை

அதேபோல , நடிகர் அருண்விஜய்க்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுகிறேன் என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X