ஜிம்முக்கு போகாமலே.. வீட்டுத் தோட்டத்திலே.. ஜாலியா செய்யலாம் யோகா.. வைரலாகும் தமன்னா வீடியோ!
சென்னை: நடிகை தமன்னா தனது தோட்டத்தில் யோகா செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
Recommended Video
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பிசி நடிகையாக வலம் வந்த தமன்னா, கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக படப்பிடிப்புகள் ரத்தாகி உள்ள நிலையில், தனது நேரத்தை யோகா போன்ற பயிற்சிகளை செய்து உடல் ஆரோக்கியத்தை பேணி வருகிறார்.
தமன்னா நடிப்பில் கடந்த ஆண்டு ஆக்ஷன் மற்றும் பெட்ரோமாக்ஸ் திரைப்படங்கள் தமிழில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹீரோயின்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், அதிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையாக, காஜல் அகர்வால், ஜாக்குலின் ஃபெர்னான்டஸ், ஊர்வசி ரவுத்தேலா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பல நடிகைகள் வீட்டில் இருந்தபடியே உடற் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
கிளாமர் யோகா
நடிகை தமன்னாவும் தனது ஃப்ரீ டைமை யோகா செய்து கழித்து வருகிறார். தனது வீட்டுத் தோட்டத்தில், பிங்க் நிற டாப்ஸ் மற்றும் லெக்கின்ஸ் அணிந்து நடிகை தமன்னா செய்யும் யோகா அவரது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தாகவும் மாறி உள்ளது. அந்த வீடியோவில் தமன்னாவின் தொப்புள் தெரிவதை பார்த்து நெட்டிசன்கள் சிலர் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

கொரோனா வராது
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை எளிதில் கொரோனா வைரஸ் தாக்கும் என்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நடிகைகள் யோகா மற்றும் உடற்பயிற்சிகளை ஜிம்முக்கு போகாமல் வீட்டிலேயே செய்து வருகின்றனர். ஜிம்முக்கு போனால் பல பேர் அங்கு வருவார்கள் என்பதால், வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து கொரோனாவில் இருந்து பாதுகாக்க முயற்சி செய்து வருகின்றனர்.

குவிகிறது லைக்ஸ்
தமன்னா நடிப்பில் உருவாகி வரும் ஜ்வாலா படத்தின் ஷூட்டிங்கும் கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கபடி கோச்சாக முதன்முறையாக தமன்னா நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான அவரது ஜ்வாலா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு லைக்குகள் குவிந்தன. இந்நிலையில், இந்த யோகா வீடியோவுக்கும் 4 லட்சத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











