மிரட்டும் கொரோனா.. வீட்டுக்குள் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல ஹீரோயின்.. பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்

By

கொச்சி: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும்விதமாக, பிரபல நடிகை, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழில், விஷாலின் சிவப்பதிகாரம், ரஜினியின் குசேலன், மாதவன் நடித்த குரு என் ஆளு, அருண் விஜய்யின், தடையறத் தாக்க உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் மம்தா மோகன் தாஸ்.

மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில், வில்லு படத்தில் இடம்பெற்ற டாடி மம்மி வீட்டில் இல்லை என்பது உட்பட பல பாடல்களையும் பாடியுள்ளார்.

தனிமைப்படுத்தினார்

தனிமைப்படுத்தினார்

இவர், மியூசிக் வீடியோ ஒன்றில் நடிப்பதற்காக சமீபத்தில் துபாய் சென்றிந்தார். சமீபத்தில் கேரளா திரும்பிய அவர், கொரோனா அச்சுறுத்தலை முன்னிட்டு கொச்சியில் உள்ள தனது வீட்டில் தன்னையே தனிமைப்படுத்தி உள்ளார். முகத்துக்கு மாஸ்க் அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதற்கு Self-ie Quarantined' என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

பாராட்டும் ரசிகர்கள்

பாராட்டும் ரசிகர்கள்

அவருக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை என்றாலும் அரசு உத்தரவை மதித்து அவர் முன்னெச்சரிக்கையாக இப்படி இருப்பதை, ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். கேரளாவில் கொரோனா பரவி வருவதை அடுத்து, இது முன் மாதிரி நடவடிக்கை என்று அவரை ரசிகர்கள் புகழந்து வருகின்றனர். அவரை பாராட்டி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

படப்பிடிப்புகள்

படப்பிடிப்புகள்

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக மக்கள் அதிகமாகக் கூடும் மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றை வரும் 31 ஆம் தேதி மூட உத்தரவிடப் பட்டுள்ளன. இதையடுத்து தியேட்டர்கள் மூடப்பட்டன. சினிமா படப்பிடிப்புகள் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. டிவி சிரீயல்களின் ஷூட்டிங்கும் பாதிக்கப்பட்டுள்ளன.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

இந்நிலையில், தங்களது பிரமாண்ட திருமண ஏற்பாடுகளையும் நடிகர், நடிகைகள் தள்ளி வைத்துள்ளனர். இதற்கிடையே முன்னணி நடிகர், நடிகைகள் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். பொதுமக்கள், அரசும் மருத்துவர்களும் கூறியுள்ள விதிமுறைகளை சரியாக பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில்தான் நடிகை மம்தா மோகன்தாஸ், தன்னை வீட்டுக்குள் தனிமைப்படுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X