'ரஜினிகாந்த்' புகார்... மல்லிகா ஷெராவத்துக்கு பிடிவாரண்ட்!!

By Staff

Mallika Sharawat
அரைகுறை ஆடையில் ஆபாசமாக நடனமாடியதாக ரஜினிகாந்த் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நடிகை மல்லிகா ஷெராவத்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது மகாராஷ்டிர மாநிலம் பந்தர்கவ்டா கோர்ட்.

முழுசாய் உடையணிய மாட்டேன் என்று சபதமே எடுத்துள்ளார் மல்லிகா ஷெராவத். விழாக்கள், நடன நிகழ்ச்சிகள் என எங்கு போனாலும் இவரது தம்மாத்துண்டு உடை பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிடும்.

சமீபத்தில் இவர் பங்கேற்ற நடன நிகழ்ச்சி ஒன்றில் மிகக் குறைந்த உடையணிந்து ஆபாச அங்க அசைவுகளைக் காட்டி, பார்வையாளருக்கு அறுவறுப்பை உண்டாக்கியதாக மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் புகார் தெரிவித்திருந்தார்.

இத்துடன் நில்லாமல் யவத்மால் மாவட்டத்தில் உள்ள பந்தர்கவ்டா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், மல்லிகாவின் ஆபாச அங்க அசைவுகளைக் கொண்ட நடனக் காட்சிகள் அடங்கிய வீடியோ சி.டி., போட்டோக்களையும் ஆதாரமாக வைத்து வழக்கும் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் , மல்லிகா ஷெராவத்துக்கு மும்பை வெர்சோவா போலீஸ் நிலையத்தின் மூலமாக சம்மன் அனுப்பியது.

ஆனால் கோர்ட்டில் ஆஜராக மல்லிகாவுக்கு அவகாசம் வேண்டும் என அவரது வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதால் இருமுறை அவகாசம் வழங்கினார் மாஜிஸ்திரேட்.

மூன்றாவது முறை விசாரணையின்போது, மல்லிகா கட்டாயம் கோர்ட்டுக்கு வரவேண்டும் என்று உத்தரவிட்டார் மாஜிஸ்திரேட்டு. ஆனால் அப்போதும் மல்லிகா ஆஜராகாததால், மல்லிகாவுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் வழக்கு தொடர்ந்த ரஜினிகாந்த்.

இதையடுத்து மல்லிகா ஷெராவத்துக்கு எதிராக ஜாமீனில் விடத்தக்க பிடிவாரண்டு பிறப்பித்து பந்தர்கவ்டா நீதிமன்றம் உத்தரவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X