'ராம் லீலா' இயக்குனர், தீபிகா படுகோனே மீது வழக்குப் பதிவு செய்ய கோர்ட் உத்தரவு
ஜெய்பூர்: ராம் லீலா படத்தில் மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக
குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அந்த படத்தின் இயக்குனர்
பன்சாலி, ஹீரோ ரன்வீர் சிங், ஹீரோயின் தீபிகா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு
ஜெய்பூர் நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பான்சாலி ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனேவை வைத்து
எடுத்துள்ள படம் ராம் லீலா. இந்த படம் இந்தி
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படம் வரும் நவம்பர் மாதம் 15ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இந்த படத்தை எதிர்த்து
வழக்கறிஞர் பவன் சர்மா என்பவர் ஜெய்பூர்
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

சண்டை மூட்டும் போல
ராம் லீலா படம் மதத்தின் அடிப்படையில் பல்வேறு அமைப்புகளுக்கிடையே பகையை மூட்டிவிடும்
என்று தெரிகிறது. அதனால் படக்குழுவினர் மீது
ஷ்யாம் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று பவன் சர்மா நீதிமன்றத்தை
கேட்டுக் கொண்டார்.

கேஸ் போடுங்க
பவனின் மனுவை விசாரித்த நீதிமன்றம் ராம் லீலா படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, ஹீரோ
ரன்வீர் சிங், ஹீரோயின் தீபிகா படுகோனே
மற்றும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.

காதல்
ராம் லீலாவில் ஜோடியாக நடித்துள்ள ரன்வீர் மற்றும் தீபிகா நிஜமாகவே காதலித்து வருவதாக
பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது.

இதுவும் வெற்றி பெறுமா?
தீபிகா நடித்த யே ஜவானி ஹை தீவானி மற்றும் சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்கள் அடுத்தடுத்து
சூப்பர் ஹிட்டாகின. இந்நிலையில் ராம் லீலா
மூலம் ஹாட்ரிக் அடிப்பாரா தீபிகா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











