ஷூட்டிங் வராமல் கல்தா கொடுத்த ஜோதிகா?.. தூக்கி கடாசிய படக்குழு?.. ஜோவை விடாமல் தொடரும் பஞ்சாயத்து
சென்னை: நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா தற்போது பிஸியாக படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்துவருகிறார். கடைசியாக அவர் டப்பா கார்ட்டெல் என்கிற வெப் சீரிஸில் நடித்தார். அது சுமாரான வரவேற்பையே பெற்றது. இப்போது இன்னொரு வெப் சீரிஸில் நடிக்க கமிட்டாகியிருக்கும் அவர்; எப்போது தமிழில் நடிப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்நிலையில் ஜோதிகா மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறார்.
வாலி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தன்னுடைய கரியரை தொடங்கியவர் ஜோதிகா. தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார். 2000த்தின் ஆரம்பத்தில் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியவர் அவர். இதற்கிடையே பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடித்தபோது அதில் ஹீரோவாக நடித்த சூர்யாவை காதலித்தார். முதலில் அந்தக் காதலுக்கு சிவகுமார் சம்மதம் கொடுக்கவில்லை. நீண்ட காலத்துக்கு பிறகு ஓகே சொன்னார்.
சூப்பர் திருமணம்: சிவகுமாரின் சம்மதம் கிடைத்ததை அடுத்து 2006ஆம் ஆண்டு அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். குழந்தைகள் பிறந்ததன் காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கிய ஜோ; சில வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வந்தார். இந்த முறை அவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்தார். அது பலரிடம் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது.

ஹிந்தியில் கவனம்: திடீரென அவருக்கு ஹிந்தியின் பக்கம் கவனம் சென்றது. அதனையடுத்து சூர்யா மற்றும் தனது குழந்தைகளுடன் மும்பை சென்று செட்டில் ஆகியிருக்கும் அவர்; பாலிவுட்டில் வெப் சீரிஸ்கள், படங்கள் என பிஸியாக இருக்கிறார். கடைசியாக அவர் டப்பா கார்ட்டெல் வெப் தொடரில் நடித்திருந்தார். மேலும் சில ப்ராஜெக்ட்களிலும் கமிட்டாகியிருக்கிறார். ஹிந்தியிலேயே முழு கவனம் இருப்பதால் தென்னிந்திய சினிமாக்களில் அவர் நடிப்பாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்தது.
மோகன்லாலின் தொடரும்: சூழல் இப்படி இருக்க மோகன் லால் நடிக்கும் தொடரும் படத்தில் ஜோதிகா நடிக்க வாய்ப்பு இருந்ததாகவும்; ஆனால் அவர்தான் ஷூட்டிங்கிற்கு வராததால் அவருக்கு பதிலாக ஷோபனா கமிட்டானதும் தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து அந்தப் படத்தின் இயக்குநர் தருண் மூர்த்தி சமீபத்தில் ஒரு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "தொடரும் படத்தில் முதலில் ஷோபனாவைத்தான் நாங்கள் தேர்வு செய்யும் முடிவில் இருந்தோம். ஆனால் அவரை எப்படி தொடர்புகொள்வது என்று எங்களுக்கு தெரியவில்லை. எனவே ஜோதிகாவிடம் பேசி பார்க்கலாம் என்கிற முடிவுக்கு வந்தோம்.
ஜோவுக்கு கதை பிடித்திருந்தது: அதனையடுத்து அவரை சந்தித்து கதையை சொன்னோம். அவருக்கு கதை பிடித்திருந்தது. கேட்டதும் உற்சாகமடைந்தார். ஆனால் ஷூட்டிங்கை நான் திட்டமிட்டிருந்த நேரத்தில் ஜோதிகாவும், சூர்யாவும் ஒரு உலக சுற்றுலாவுக்கு திட்டமிட்டிருந்தார்கள். அதன் காரணமாக ஜோவால் ஷூட்டிங்கிற்கு வர முடியவில்லை. எனவே அவருக்கு பதிலாக மீண்டும் ஷோபனாவையே படத்தில் நடிப்பதற்கு கமிட் செய்துவிட்டோம்" என்றார். தருண் மூர்த்தியின் இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்களோ, 'ஜோதிகாவுக்கு ஏன் வேண்டாத வேலை. ஸ்க்ரிப்ட் பிடித்து ஷுட்டிங்கிற்கு வருகிறேன் என்கிற ரீதியில் படக்குழுவுக்கு நம்பிக்கையை கொடுத்துவிட்டு உலக சுற்றுலாவுக்கு செல்லலாமா?.. அவருக்கு என்னதான் ஆச்சு என்று கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











