அப்பா வயது ஹீரோவுக்கு ஜோடி: வாரிசு நடிகை விளக்கம்

By Siva

Recommended Video

அப்பா வயது ஹீரோவுக்கு ஜோடியாக நடிப்பது குறித்து ஆலியா பட் விளக்கம்- வீடியோ

மும்பை: அப்பா வயது ஹீரோவுக்கு ஜோடியாக நடிப்பது குறித்து ஆலியா பட் விளக்கம் அளித்துள்ளார்.

பாலிவுட்டில் பிரமாண்ட படங்கள் எடுப்பதற்கு பெயர் போன சஞ்சய் லீலா பன்சாலி சல்மான் கான், ஆலியா பட்டை வைத்து இன்ஷா அல்லாஹ் என்ற படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தில் ஆலியா சல்மான் ஜோடியாக நடிக்கிறார் என்று தெரிந்ததும் பலரும் விமர்சிக்கத் துவங்கினர்.

மகள்

மகள்

53 வயதாகும் சல்மான் கானுக்கு 26 வயதாகும் ஆலியா பட் ஜோடியா?. அப்பாவும், மகளும் சேர்ந்து நடித்தது போன்று இருக்கும். பன்சாலி ஏன் இப்படி ஒரு ஜோடியை தேர்வு செய்துள்ளார் என்று விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து ஆலியா பட் விளக்கம் அளித்துள்ளார்.

ஆலியா

ஆலியா

எனக்கு எந்த விமர்சனமும் வரவில்லை. சொல்லப் போனால் நான் மகிழ்ச்சியாக உள்ளேன். யார் என்ன பேசுகிறார்கள் என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை. சல்மான் அல்லது பன்சாலி சாரும் அதை எல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன் என்கிறார் ஆலியா.

பன்சாலி

பன்சாலி

நமக்கு பல நல்ல படங்களை அளித்தவர் சஞ்சய் லீலா பன்சாலி. அவரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அவரின் கதை மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டுமே தவிர அதை விட்டுவிட்டு யூகிக்கக்கூடாது என்று ஆலியா பட் தெரிவித்துள்ளார்.

சாதாரணம்

சாதாரணம்

அப்பா வயது ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிகைகள் நடிப்பது ஒன்றும் புதிது அன்று. இருப்பினும் ஆலியா, சல்மான் ஜோடியை பலரும் தற்போதே விமர்சிக்கத் துவங்கிவிட்டனர். ஆனால் ஆலியாவோ சல்மானுடன் சேர்ந்து நடிப்பதை நினைத்து பெருமகிழ்ச்சியில் உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X