twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாற்றி மாற்றி பேசும் மீரா மிதுன்.. மன நல ஆலோசகர் முன்னிலையில் விசாரிக்க போலீஸ் முடிவு!

    |

    சென்னை: காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல், மாற்றி மாற்றி பேசி வருவதால் மன நல ஆலோசகர் முன்னிலையில் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    Recommended Video

    Meera Mitun-ன் BoyFriend Abishek Sam கைது | Tamil Filmibeat

    நடிகை மீரா மிதுன் சர்ச்சைக்குரிய வகையில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். ஆனால் சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோதான் பெரும் தலைவலியாக மாறியது.

    பிகினியில் மூச்சுமுட்டவைத்த கீர்த்தி பாண்டியன்... அப்பா பெயரை கெடுக்காதீங்க.. விளாசும் ரசிகர்கள்!பிகினியில் மூச்சுமுட்டவைத்த கீர்த்தி பாண்டியன்... அப்பா பெயரை கெடுக்காதீங்க.. விளாசும் ரசிகர்கள்!

    சமூகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் சாதி வெறியுடன் அவர் பேசிய பேச்சு பெரும் வைரலானது. ஆண் நண்பருடன் சேர்ந்து வீடியோ வெளியிட்ட மீரா மிதுன், பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியிருந்தார்.

    குற்றப் பின்னணி உடையவர்கள்

    குற்றப் பின்னணி உடையவர்கள்

    பட்டியலின மக்கள் அனைவரும் குற்றப் பின்னணி உடையவர்கள் என்று கூறிய மீரா மிதுன், தமிழ் சினிமாவில் உள்ள பட்டியலின இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் நடிகைகளை வெளியேற்ற வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    மீரா மிதுன் மீது புகார்

    மீரா மிதுன் மீது புகார்

    மீரா மிதுனின் இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் மீரா மிதுனை கைது செய்ய வேண்டும் சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்தன.

    7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

    7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வன்னியரசு அளித்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது சென்னை சைபர் க்ரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு அவருக்கு சைபர் க்ரைம் போலீசார் கடந்த வாரம் சம்மன் அனுப்பினர்.

    தலைமறைவான மீரா மிதுன்

    தலைமறைவான மீரா மிதுன்

    ஆனால் நேரில் ஆஜராகத மீரா மிதுன், தலைமறைவானார். கேரளாவில் இருந்தப்படி வீடியோக்களை வெளியிட்டு வந்தார் மீரா மிதுன். பிரதமர் மோடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் தனக்கு தமிழகத்தில் அநீதி இழைக்கப்படுவதாக கூறி வீடியோ வெளியிட்டார் மீரா மிதுன்.

    தொல்லை தருபவர்களை தான் பேசினேன்

    தொல்லை தருபவர்களை தான் பேசினேன்

    மேலும் தனக்கு தொந்தரவு செய்தவர்களை தான் பேசியதாகவும் எந்த ஆண்கள் தனக்கு தொல்லை கொடுக்கிறார்களோ அவர்களை தான் பேசியிருக்கேன் என்றும் கூறினார். ஆனால் மக்கள் முன்பு தன்னை தவறாக காட்ட அது தவறாக வெளியே போகிறது என்றும் வீடியோவில் விளக்கமளித்தார் மீரா மிதுன்.

    காந்தி, நேரு ஜெயிலுக்கு போகலையா

    காந்தி, நேரு ஜெயிலுக்கு போகலையா

    அந்த சாதியை சேர்ந்த எல்லோருக்கும் தான் தன்னுடைய புராஜெக்ட்டுகளில் வாய்ப்பளித்திருப்பதாக கூறிய மீரா மிதுன் இந்த சின்ன விஷயத்துக்காக நாடே போர்களமாக வெடித்து மீரா மீதுனை அரெஸ்ட் பண்ண சொல்கிறார்கள் என்றார். மேலும் தன்னை தாராளமா அரெஸ்ட் பண்ணுங்க என்ற அவர் காந்தி, நேரு ஜெயிலுக்கு போகலையா என்றும் தனக்கு அதைப்பத்தியெல்லாம் கவலை இல்லை என்றும் தெனாவட்டாக கூறியிருந்தார்.

    கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுன்

    கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுன்

    தன்னை கைது செய்வது என்பது எப்போதும் நடக்காது என்றும் தன்னை கைது செய்வது என்பது உங்கள் கனவில்தான் நடக்கும் என்றும் போலீசுக்கு சவால் விட்டார் மிரா மிதுன். இந்நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கியிருந்த மீரா மிதுனை கடந்த சனிக்கிழமை அதிரடியாக கைது செய்தனர் போலீசார்.

    கைது செய்தால் செத்து விடுவேன்

    கைது செய்தால் செத்து விடுவேன்

    போலீசாரை கண்டதும் கத்தி கூச்சலிட்டு ஆர்பாட்டம் செய்தார் மீரா மிதுன். மேலும் தன்னை கைது செய்ய முயன்றால் கத்தியால் குத்திக்கொண்டு செத்துப் போய்விடுவேன் என்றும் மிரட்டினார். தன்னுடைய ஆர்ப்பாட்டங்களை வீடியோவாக பதிவிட்டிருந்தார் மீரா மிதுன்.

    மீரா மிதுனின் ஆண் நண்பரும் கைது

    மீரா மிதுனின் ஆண் நண்பரும் கைது

    ஒரு வழியாகமீரா மிதுனை கைது செய்த போலீசார், அவரது ஆண் நண்பர் அபிஷேக்கையும் போலீசார் வாகனத்திலேயே அழைத்து வந்தனர். போலீஸ் வாகனத்தில் மீரா மிதுன் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால் தமிழ்நாடு எல்லைக்கு வந்தபோது உதவிக்கு கோவை மாவட்ட பெண் போலீசார் வரவழைக்கப்பட்டனர். பெண் போலீசாரின் உதவியோடு கைதான மீரா மிதுன், கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

    27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

    27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

    அப்போது தன்னுடைய கையை போலீசார் உடைக்க முயன்றதாகவும் போலீசார் கொடுமை படுத்துவதாகவும், சாப்பாடு கொடுக்கவில்லை என்றும் கூச்சலிட்டப்படியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

    மன நல ஆலோசகர் முன்னிலையில்

    மன நல ஆலோசகர் முன்னிலையில்

    இந்நிலையில் நடிகை மீரா மிதுன் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல், மீரா மிதுன் மாற்றி மாற்றி பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மன நல ஆலோசகர் முன்னிலையில் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர். மீரா மிதுன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Cyber crime police decided to inquire Actress Meera Mithun in front of psychiatrist. Meera Mithun arrested on Saturday in Kerala.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X