twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வசமாக சிக்கும் மீரா மிதுன்.. காவலில் எடுத்து விசாரிக்க எம்.கே.பி நகர் போலீசார் முடிவு!

    |

    சென்னை: நடிகை மீரா மிதுனை காவலில் எடுத்து விசாரிக்க சைபர் க்ரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    நடிகை மீரா மிதுன் பட்டியலின மக்கள் குறித்து ஆண் நண்பருடன் சேர்ந்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அருண்விஜய்யின் 'AV33' பழனியில் விறுவிறுப்பான படப்பிடிப்பு … விரைந்து முடிக்க படக்குழு திட்டம் !அருண்விஜய்யின் 'AV33' பழனியில் விறுவிறுப்பான படப்பிடிப்பு … விரைந்து முடிக்க படக்குழு திட்டம் !

    இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு அமைப்புகள் நடிகை மீரா மிதுனுக்கு எதிராக காவல் நிலையங்களில் புகார் அளித்தன. இது தொடர்பாக ஆஜராகும்படி நடிகை மீரா மிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.

    கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுன்

    கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுன்

    ஆனால் போலீஸில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தப்படி வீடியோக்களை வெளியிட்டு வந்தார் மீரா மிதுன். இதனை தொடர்ந்து கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் சாம் அபிஷேக் போலீசார் கடந்த 14ஆம் தேதி கைது செய்தனர்.

    வாய் தவறி பேசி விட்டேன்

    வாய் தவறி பேசி விட்டேன்

    இதனை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதில், தன்னைப் பற்றி அவதூறாக செய்தி பரப்பியதால் ஏற்பட்ட மன உளைச்சலால், கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசிய போது, வாய் தவறி பட்டியலின சமுதாயத்தை பற்றி பேசியதாகவும், தான் பேசியது தவறு தான் என்றும் குறிப்பிட்டிருந்தார்,

    பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கேன்

    பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கேன்

    ஆனால், தான் சொல்லாத வார்த்தைகளை பேசியதாக புகார் அளித்தவர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும், பட்டியலின மக்களோடு தான் நட்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார். பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார் மீரா மிதுன்.

    ஜாமீன் வழங்க மறுப்பு - மனு தள்ளுபடி

    ஜாமீன் வழங்க மறுப்பு - மனு தள்ளுபடி

    மேலும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாகவும், சாட்சிகளை கலைக்க மாட்டோம் எனவும் மனுவில் இருவரும் உத்தரவாதம் அளித்தனர். ஆனால் அந்த மனுவை நேற்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அவரது ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

    போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

    போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

    இந்நிலையில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில் நடிகை மீரா மிதுனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எம்.கே.பி நகர் போலீஸார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் கூறி வருவதாக ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் 2020 செப்டம்பர் மாதம் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதிலும் ஆஜராகாத மீரா மிதுன்

    அதிலும் ஆஜராகாத மீரா மிதுன்

    அந்த புகாரின் அடிப்படையில் நடிகை மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல், பிறருக்கு தொல்லை தருதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உட்பட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதுதொடர்பான விசாரணைக்கு சம்மன் அனுப்பியும் நடிகை மீரா மிதுன் ஆஜராகவில்லை. இந்த நிலையில் பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    எம்.கே.பி நகர் போலீஸார் மனு

    எம்.கே.பி நகர் போலீஸார் மனு

    இந்நிலையில் எம்.கே.பி நகர் போலீஸார் மீரா மிதுனை காவலில் எடுத்து விசாரணை செய்வதற்காக எழும்பூர் பத்தாவது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் அவதூறு வழக்கில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக எம்.கே.பி நகர் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.இதனால் நடிகை மீரா மிதுன் தற்போது வெளியே வருவது என்பது கேள்வி குறியாகியுள்ளது.

    English summary
    Cyber crime police decided to take Actress Meera Mithun in custody. Meera Mithun arrested on 14th in Kerala with her boy friend.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X