twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீரா மிதுன் யூடியூப் சானலை முடக்க வேண்டும்... மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடிதம்!

    |

    சென்னை: நடிகை மீரா மிதுனின் யூடியூப் சானலை முடக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

    Recommended Video

    Meera Mithun Arrested In Kerala And Brought To Chennai | Tamil Filmibeat

    சாதிய பிரச்சனைகளை கிளப்பும் வகையில் பட்டியலின மக்கள் குறித்து அவர் அவதூறாக பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

    காசேதான் கடவுளடா படத்தில் இவர் ரோலில் தான் நடிக்கிறேன்....யோகிபாபு பகிர்ந்த சூப்பர் தகவல் காசேதான் கடவுளடா படத்தில் இவர் ரோலில் தான் நடிக்கிறேன்....யோகிபாபு பகிர்ந்த சூப்பர் தகவல்

    கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

    சோஷியல் மீடியாவில் வைரல்

    சோஷியல் மீடியாவில் வைரல்

    திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து வந்த நடிகை மீரா மிதுன் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வைரலாகி வந்தார். நெட்டிசன்கள் அவரது போட்டோக்களை திட்டித் தீர்த்தும் கழுவி ஊற்றியும் ட்ரோல் செய்வதை வாடிக்கையாக கொண்டு இருந்தாலும் தொடர்ந்து எல்லை மீறும் கவர்ச்சியை காட்டி வந்தார்.

    மாடல் அழகி

    மாடல் அழகி

    மாடல் அழகியான மீரா மிதுன் அழகிப் பட்டம் வென்றதிலும் கோல்மால் செய்ததாக சர்ச்சைகள் வெடித்தன. அந்த சர்ச்சைகள் தான் அவரை பிக் பாஸ் வீட்டுக்கு கொண்டு சென்றது. சர்ச்சை பிரபலங்களை வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சி டிஆர்பியை ஏற்றி வரும் நிலையில், மீரா மிதுனையும் பிரபலமாக்கியது பிக் பாஸ் நிகழ்ச்சி.

    காப்பி அடிக்கிறாங்க

    காப்பி அடிக்கிறாங்க

    தான் ஒரு சூப்பர் மாடல் என்றும் பாலிவுட் நடிகைகள் முதல் கோலிவுட் நடிகைகள் வரை பலரும் தன்னை பார்த்து தனது போட்டோஷூட்டை பார்த்து அப்படியே காப்பி அடிக்கின்றனர். சொந்தமாக யோசிக்கத் தெரியாத இவர்கள் எல்லாம் எப்படி முன்னணி நடிகைகளாக மாறினார்கள் என்றே தெரியவில்லை என்றும் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

    ஆபாச பேச்சு

    ஆபாச பேச்சு

    மேலும், முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து மிகவும் கீழ்த்தரமான வகையில் ஆபாச பேச்சுக்களை பேசி வந்தார் மீரா மிதுன். கோலிவுட் நடிகர்கள் பலரது அந்தரங்க ரகசியங்களை அம்பலப்படுத்தப் போவதாகவும் பல முறை சவால் விட்டு வீடியோக்களை வெளியிட்டு வைரலாக்கினார்.

    யூடியூப் பக்கம்

    யூடியூப் பக்கம்

    மீரா மிதுனின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. அதன் பிறகு தனது யூடியூப் பக்கத்தின் மூலமாக ஏகப்பட்ட வீடியோக்களை இது போல பேசி பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி வந்தார். சமீபத்தில், பட்டியலின மக்கள் அனைவரும் குற்றப் பின்னணி உடையவர்கள் என அவர் பேசிய பேச்சு பெரிய அளவில் சர்ச்சையாகவே அவர் மீது புகார்கள் குவிந்து போலீசார் அதிரடியாக அவரை கைது செய்தனர்.

    முடக்க கோரிக்கை

    முடக்க கோரிக்கை

    யூடியூப் பக்கத்தில் ஆபாசமாகவும் சர்ச்சையாகவும் பேசி வரும் பலர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது யூடியூப் பக்கத்தை முடக்க யூடியூப் நிறுவனத்துக்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். விரைவில் மீரா மிதுனின் யூடியூப் பக்கம் முடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புரிதல் இல்லாமல்

    புரிதல் இல்லாமல்

    சட்ட புரிதல் இல்லாமல் வாய்க்கு வந்தபடி இஷ்டத்துக்கு பேசினால் வைரலாகி விடுவோம் என நினைத்து மீரா மிதுன் எல்லை மீறி பேசியதன் விளைவாகவே கைது செய்யப்பட்டு இருக்கிறார். சமூக வலைதளம் நமது கையில் இருந்தாலும், சமூக அக்கறையுடன் நடந்து கொள்ளாமல் இப்படி எல்லை மீறி போனால் அதற்கான விளைவுகளையும் இளைஞர்கள் சந்திக்க நேரிடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    English summary
    Cyber Crime Branch Police wants to block Meera Mithun’s youtube channel permanently and wrote a letter to Youtube also.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X