சந்தியாவின் 'சைக்கிள்'
காதல் சந்தியாவுக்கு மலையாளத்தில் புதுப் படம் கிடைத்துள்ளது. படத்துக்கு சைக்கிள் என பெயரிட்டுள்ளனர்.
| Click here for more images |
மலையாளத்தில் பிரபல நடிகர் சீனிவாசன். நல்ல கதாசிரியரும், வசனகர்த்தாவும் கூட. அவரது மகன்தான் வினீத் சீனிவாசன். இவர் பாடகராக இருக்கிறார். தற்போது ஹீரோவாக அறிமுகமாகிறார். அவர் நடிக்கப் போகும் படம்தான் சைக்கிள். சந்தியா, இவருக்குத்தான் ஜோடியாக நடிக்கிறார்.
லால் கிரியேஷன்ஸ், மாஸ்டர் சினிமாஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர்.
சின்ன இடைவெளிக்குப் பிறகு சந்தியா மீண்டும் மலையாளத்தில் நடிக்க வந்துள்ளார். காதல் படத்திற்குப் பிறகு மலையாளத்தில் ஆலிஸ் இன் தி ஒண்டர்லேண்ட் படத்தில் நடித்தார். படம் போணியாகவில்லை. இதனால் அப்செட் ஆகியிருந்தார் சந்தியா.
இந்த நிலையில் மீண்டும் நடிக்க வந்திருக்கும் சைக்கிள் சூப்பராக ஓடி தன்னைக் காப்பற்றட்டும் என்ற வேண்டுதலுடன் படத்திற்குத் தயாராகி வருகிறார்.
கொச்சி ஹனீபா, ஜெகதி, சாய்குமார் ஆகியோரும் படத்தில் உள்ளனர். இயக்குநர் ஜானி ஆண்டனியும், வசனகர்த்தா ஜேம்ஸ் ஆல்பர்ட்டும் இப்படத்தில் கை கோர்த்துள்ளனர்.
படம் குறித்து ஜானி ஆண்டனி கூறுகையில், இளைஞர்களுக்கான டம் இது. இப்போது பரபரப்பாக உள்ள ஐ.டி. கலாச்சாரத்தை பின்னணியாகக் கொண்ட கதை இது. இப்படம் மலையாள சினிமாவின் முகத்தையும், டிரெண்டையும் மாற்றும் என்ற நம்பிக்கையில் உள்ளேன் என்றார்.
சென்னை தரமணியில் வருகிற அக்டோபர் 3ம் தேதி படப்பிடிப்பு ஆரம்பமாகிறதாம். கொச்சியிலும் படப்பிடிப்பை மேற்கொள்ளவுள்ளனர்.
சைக்கிள் நல்லா ஓடட்டும்!


Click it and Unblock the Notifications











