'ஸ்ருதி... நீங்க படத்தோட நடிகை மட்டும்தான்... உங்க வேலைய பாருங்க'- தயாரிப்பாளர் கண்டனம்

By Shankar

டி டே படம் எங்கள் சொத்து. அதை எந்த மொழியிலும் எப்படி வேண்டுமானாலும் வெளியிடும் உரிமை எங்களுக்கு மட்டுமே உண்டு. இந்தப் படத்தில் நடித்த ஸ்ருதி வெறும் நடிகை மட்டும்தான். எதிர்ப்பு காட்ட எந்த உரிமையும் அவருக்கில்லை, என்று அந்தப் படத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

டி டே

டி டே

கடந்த வருடம் இந்தியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படம் டி டே. நிகில் அத்வானி இப்படத்தை இயக்கிருந்தார். இதில் சுருதிஹாசன் பாலியல் தொழிலாளி கேரக்டரில் படு ஆபாசமாக நடித்திருந்தார்.

ஆபாச காட்சிகள்

ஆபாச காட்சிகள்

அவரது படுக்கையறைக் காட்சி படங்கள் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின. இது தற்போது தாவூத் என்ற பெயரில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

150 அரங்குகள்

150 அரங்குகள்

தமிழகம் முழுவதும் விரைவில் இப்படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடக்கிறது. 150 தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டுள்ளனர்.

ஸ்ருதி எதிர்ப்பு

ஸ்ருதி எதிர்ப்பு

ஆனால் இப்படத்தை தமிழில் வெளியிடுவதற்கு சுருதிஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது அனுமதி பெறாமல் தமிழில் இந்த படத்தை டப்பிங் செய்துள்ளனர் என்றும், இது தயாரிப்பு நிறுவனம் தன்னுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு எதிரானது என்றும் இது குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். இயக்குநர் நிகில் அத்வானியும் எதிர்த்துள்ளார்.

தயாரிப்பாளர்கள் கண்டனம்

தயாரிப்பாளர்கள் கண்டனம்

இதற்கு டி டே படத்தின் தயாரிப்பு நிறுவனமான டர்மோஷன் பிக்சர்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "டி டே பட டப்பிங்கை எதிர்ப்பது நியாயமற்றது. ஸ்ருதி ஹாசன் இப்படத்தின் நடிகை. அவருக்கு வேறு எந்த சம்பந்தமும் படத்தில் இல்லை. நிகில் அத்வானியுடன் ஒப்பந்தம் போட்டபடிதான் நடந்துள்ளோம்.

உரிமை இல்லை

உரிமை இல்லை

இந்தப் படத்தை தமிழில் வெளியிடமாட்டோம் என எந்த ஒப்பந்தமும் போடவில்லை. எனவே இதில் தலையிட, பணம் பெற்றுக்கொண்டு நடித்த ஸ்ருதிக்கு எந்த உரிமையும் இல்லை.

குறிப்பிட்ட சில படங்களை வெளியிடக் கூடாது என்றும் போஸ்டர்களாக ஒட்டக் கூடாது என்றும் நாங்களே விநியோகஸ்தர்களிடம் வலியுறுத்தியுள்ளோம். எங்கள் நிறுவனத்தின் மதிப்பை கெடுக்க முயற்சி நடக்கிறது. அவதூறு பரப்பினால் ஸ்ருதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்," என்று தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X