டகால்டி நாயகி என்னம்மா நடிக்கிறாங்க.. பாருங்க.. வைரலாகும் ரித்திகா சென்னின் டிக் டாக் வீடியோ!

Recommended Video

DAGAALTY MOVIE | POSTER PAKIRI REVIEW | FILMIBEAT TAMIL

சென்னை: சந்தானத்தின் டகால்டி படத்தில் நடித்துள்ள நாயகி ரித்திகா சென்னின் டிக் டாக் வீடியோ வைரலாகி வருகிறது.

ஹேண்ட் மேட் ஃபிலிம்ஸ், 18 ரீல்ஸ் தயாரித்துள்ள டகால்டி படம் நேற்று திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அறிமுக இயக்குநரான விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், யோகி பாபு, ரித்திகா சென், ராதா ரவி, பிரம்மானந்தம், ரேகா, மனோபாலா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

வங்காள நடிகை

வங்காள நடிகை

மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல நடிகை ரித்திகா சென், சந்தானத்தின் டகால்டி திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி உள்ளார். வங்காளத்தில் வெளியான போர்பாத், ராஜா ராணி ராஜி, அர்ஷிநகர், வில்லன், ஜியோ பாக்லா உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்து அசத்தியுள்ளார்.

கோலிவுட் என்ட்ரி

கோலிவுட் என்ட்ரி

கொல்கத்தாவை சேர்ந்த 28வயது நடிகை ரித்திகா சென் டகால்டி படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு காலடி எடுத்து வைத்துள்ளார். ஷங்கரின் உதவி இயக்குநரான விஜய் ஆனந்த், ரித்திகா சென்னின் அசத்தலான நடிப்பு டகால்டி படத்துக்கு உதவியாக இருக்கும் என கருதி இவரை இந்த படத்தில் நாயகி ஆக்கியுள்ளார்.

விஜய் – அஜித் டைரக்டர்

விஜய் – அஜித் டைரக்டர்

மேலும், டகால்டி படத்தில் இயக்குநராகும் கனவில் இருக்கும் பெண்ணாக ரித்திகா சென் நடித்துள்ளார். விஜய் மற்றும் அஜித்தை வைத்து படம் இயக்கப் போவதாக இவர் கூறும் போது அதற்கு கவுன்ட்டர் வசனமாக அப்போ அட்லீ, சிவாலாம் என்ன பண்ணுவாங்க என செம்ம கலாய் கலாய்த்திருப்பார் சந்தானம்.

டிக் டாக் வீடியோ

சந்தானத்துக்கு ஜோடியாக தமிழில் அறிமுகம் ஆகியுள்ள ரித்திகா சென் குறித்து இணையதளத்தில் தமிழ் ரசிகர்கள் அதிகமாக தேடி வருகின்றனர். மேலும், சமீபத்தில் அவர் பதிவிட்ட டிக் டாக் வீடியோ ஒன்றையும் சந்தானம் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். சிறிய கூந்தல் உடன் இருக்கும் தனது முடி குறித்து குறும்புத்தனமாக டிக் டாக் வீடியோவை ரித்திகா வெளியிட்டுள்ளார்.

சேலையில் செம்ம க்யூட்

திருச்செந்தூரில் இருந்து நாயகி ரித்திகா சென்னை, பெண் பித்து பிடித்த பணக்கார வில்லனிடம் கொண்டு சேர்க்கும் வேலையை செய்ய வரும் சந்தானம், நாயகி ரித்திகா சென்னை கடத்திக் கொண்டு போய் வில்லனிடம் ஒப்படைக்கிறாரா இல்லை வில்லன்களுடன் போராடி காதலியுடன் கை சேர்கிறாரா என்பது தான் டகால்டி படத்தின் கதை. இந்த படத்தில் சேலையில் செம்ம க்யூட்டாக ரித்திகா நடித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X