தனுஸ்ரீயிடம் நானா படேகர் தவறாக நடந்து கொண்டாரா?: சம்பவ இடத்தில் இருந்த நடிகை பேட்டி

By Siva

மும்பை: நானா படேகர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த நடிகை டெய்சி ஷா தனுஸ்ரீ தத்தாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஹார்ன் ஓகே ப்ளீஸ் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டபோது நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தனுஸ்ரீ தத்தா புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த நடிகை டெய்சி ஷா இது குறித்து பேட்டி அளித்துள்ளார். அந்த படத்தின் டான்ஸ் மாஸ்டரான கணேஷ் ஆச்சார்யாவின் உதவியாளராக பணியாற்றிய டெய்சி கூறியிருப்பதாவது,

பிரச்சனை

பிரச்சனை

தனுஸ்ரீக்கு ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுப்பது தான் என் வேலை. பாடலை ஷூட் செய்வதற்கு முன்பு 3-4 நாட்களுக்கு பயிற்சி கொடுத்தோம். செட்டிலும் முதல் 2 நாட்கள் எந்த பிரச்சனையும் இன்றி சுமூகமாக எல்லாம் நடந்தது. மூன்றாவது நாள் ஏதோ நடந்தது. ஆனால் அது என்னவென்று எனக்கு தெரியாது. சம்பவம் நடந்தது என்று மட்டும் தெரியும்.

தனுஸ்ரீ

தனுஸ்ரீ

ஒரு பெண்ணாக இருந்து கொண்டு தனுஸ்ரீ தனக்கு இப்படி ஒரு விஷயம் நடந்தது என்று பேசியுள்ளார். நான் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். தயாரிப்பாளர் அல்லது இயக்குனர் அல்லது நடிகர் செய்தது சரியா என்று எனக்கு தெரியாது. ஆனால் ஒரு பெண்ணாக நான் தனுஸ்ரீ தத்தாவுக்கு என் முழு ஆதரவை தெரிவிக்கிறேன்.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

தனுஸ்ரீ இதை விளம்பரம் தேட சொல்லவில்லை. 10 ஆண்டுகளாக மனதிற்குள் வைத்திருந்த குமுறல்களை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவர் கஷ்டப்பட்டிருக்கிறார் அதனால் பேசுகிறார். தனுஸ்ரீயை பார்த்துவிட்டு அவரை போன்ற சங்கடத்தை சந்தித்தவர்கள் தாங்களும் முன் வந்து பேசுவார்கள். அந்த சம்பவம் நடந்த அன்று தனுஸ்ரீயின் கார் சேதமடைந்தது.

வேன்

வேன்

ஷூட்டின் போது தனுஸ்ரீ பாடலுக்கு டான்ஸ் ஆட பயிற்சி செய்தார். ஆனால் திடீர் என்று கேரவனுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். அவரை தவறாக தொட்டிருக்கலாம். அவர் கேரவனுக்குள் சென்ற பிறகு மீடியா வந்தது. பின்னர் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது என்று டெய்சி ஷா தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது பெயரை அவமதிக்கும் விதமாக பேசுவதாகக் கூறி நானா படேகர் தனுஸ்ரீக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X