Don't Miss!
- News வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கிவிட்டதாக போராடிய கோவை பாஜகவினர் கையில் ஓட்டு போட்ட மை!
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விமானத்தில் பாலியல் தொல்லை: பிரபல நடிகை வெளியிட்ட கண்ணீர் வீடியோ
மும்பை: தங்கல் பட புகழ் நடிகை ஜாய்ரா வாசிம் விமானத்தில் பயணம் செய்தபோது ஒருவர் அவரிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
ஆமீர் கான் நடித்த தங்கல் படத்தில் சிறு வயது கீதா போகாட்டாக நடித்தவர் ஸ்ரீநகரை சேர்ந்த ஜாய்ரா வாசிம்(17). இதையடுத்து அவர் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் என்ற படத்திலும் நடித்தார்.
ஜாய்ரா விஸ்தாரா விமானம் மூலம் டெல்லியில் இருந்து மும்பை சென்றுள்ளார்.
சில்மிஷம்
விமானத்தில் ஜாய்ராவுக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஆண் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தனது காலால் ஜாய்ராவின் பின்பகுதியை உரசியுள்ளார். மேலும் கழுத்திலும் உரசியுள்ளார்.
|
வீடியோ
விமானத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து ஜாய்ரா வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ஒரு சிறுமியை இப்படி எல்லாம் செய்யக் கூடாது என்று அழுது கொண்டே பேசியுள்ளார் ஜாய்ரா.
கால்கள்
தன்னிடம் சில்மிஷம் செய்தவனின் காலையும் வீடியோ எடுத்துள்ளார் ஜாய்ரா. இப்படித் தான் பெண்களை பாதுகாக்கப் போகிறார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஜாய்ரா.
|
ட்வீட்
ஜாய்ரா வாசிமுக்கு நடந்த கொடுமை குறித்து அறிந்த ஏர் விஸ்தாரா நிறுவனம் இது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளை தாங்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்வது இல்லை என்றும் ட்வீட்டியுள்ளது.