சூப்பர் ஸ்டார் ரசிகையாக தங்கல் பட நடிகை..காத்திருக்கும் சூப்பர் ட்விஸ்ட்!
மும்பை: ஆமிர் கானுடன் இணைந்து சன்யா மல்ஹோத்ரா நடித்த படம் தான் தங்கல்.இந்த படம் மூலம் தான் சினிமா துறைக்கு சன்யா அறிமுகமானார்.
மல்யுத்த வீராங்கனையாக நடித்த சன்யாவுக்கு நல்ல பெயர்,புகழை பெற்று தந்தது இப்படம் .அறிமுக படம் போல் தெரியாத அளவுக்கு வெளுத்து வாங்கினார் என்றும் சொல்லலாம்.
தற்போது இவர் நடித்து இருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வர் திரைப்படம் அனைவரின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

தங்கல் ட்விஸ்ட்
காதல்,ரொமான்ஸ் என்று பல நடிகைகள் நடித்து கொண்டு இருக்க, தனது முதல் படமே விளையாட்டு சம்மந்தப்பட்ட படமாக அமைந்து இவருக்கு சினிமா துறையில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.அதிலும் ஆமிர் கானுடன் இணைந்து நடித்தது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.ஹிந்தியில் மட்டும் அல்லாமல் பல மொழிகளில் இப்படம் வெளிவந்து வெற்றிநடை போட்டு,வசூலை வாரி குவித்தது.

சகுந்தலா தேவி
தங்கல் படத்திற்கு பிறகு பல படங்கள் நடித்த சன்யா,சகுந்தலா தேவி,லுடோ, பாகலைட்,போன்ற வெற்றி படத்திலும் நடித்தார்.ஆனால் அவை அனைத்தும் ஓடிடியில் வெளிவந்தது.தற்போது இவர் நடித்து வெளிவர இருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வர் படமும் நெட்ஃபிலிக்சில் நவம்பர் 5 ஆம் தேதி வெளிவர உள்ளது.

மீனாட்சியாக சன்யா
மீனாட்சியாக நடிக்கும் சன்யா, புடவையில் கலக்கியுள்ளார்.மேலும் இவர் இந்தப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகையாகவும் நடித்துள்ளார்.இவர் பேசும் சூப்பர்ஸ்டார் பற்றிய வசனங்கள் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.கணவன்,மனைவிக்கும் ஏற்படும் பிரச்சனைகளும் அதை சமாளிக்கும் விதமும், மீனாக்ஷியாக வாழ்ந்துள்ளார் சன்யா.

பிஸியான மீனாட்சி
எப்போதும் சமூகவலைதளபாகத்தில் பிஸியாக இருக்கும் சன்யா, ரசிகர்களை போலவே இப்படம் வெளிவர காத்துகொண்டு இருக்கிறார்.தினமும் அப்படத்தின் புகைப்படத்தையும்,இவரது கவர்ச்சி புகைப்படத்தையும் வெளியிட்டு கொண்டு இருக்கிறார்.இதனை பார்த்த ரசிகர்களும் படத்திற்காக மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும்,படம் வெற்றி பெற தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











