»   »  ஸ்ருதி, அக்ஷரா மட்டும் அல்ல கமலின் 'இந்த' மகளும் சோடை போகவில்லை

ஸ்ருதி, அக்ஷரா மட்டும் அல்ல கமலின் 'இந்த' மகளும் சோடை போகவில்லை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தங்கல் படத்தில் கீதா குமாரி போகத் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாத்திமா சனா சேக் கமல் ஹாஸனின் கண்டுபிடிப்பு ஆவார்.

தங்கல் படத்தில் மல்யுத்த வீராங்கனையாக நடித்துள்ளவர் இல்லை இல்லை வாழ்ந்துள்ளவர் பாத்திமா சனா சேக். படத்தை பார்ப்பவர்கள் எல்லாம் ஆமீர் கானை மட்டும் அல்ல அவரின் மகள்களாக நடித்த பாத்திமா மற்றும் சான்யாவையும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

கீதா குமாரி போகத்தாக வாழ்ந்துள்ள பாத்திமாவை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் உலக நாயகன் கமல் ஹாஸன்.

சாச்சி 420

சாச்சி 420

தமிழில் ஹிட்டான அவ்வை சண்முகி படத்தை கமல் இந்தியில் ரீமேக் செய்தார். அவரே தயாரித்து, இயக்கி நடித்த அந்த படத்தில் அவரின் மகளாக நடித்தவர் பாத்திமா சனா சேக்.

கமல்

கமல்

கமல் ஹாஸன் சார் படத்தில் நடித்தபோது நான் ரொம்ப சின்ன பொண்ணாக இருந்தேன். அதனால் அவருடன் பணியாற்றியது பற்றி சரியாக நினைவில் இல்லை என்று பாத்திமா தெரிவித்துள்ளார்.

மீண்டும்

மீண்டும்

குழந்தையாக இருந்தபோது அவர் படத்தில் நடித்ததை நினைத்து பார்க்க முயல்கிறேன், முடியவில்லை. நான் மீண்டும் கமல் சாருடன் நடிக்க விரும்புகிறேன் என்கிறார் பாத்திமா சனா சேக்.

ஆமீர்

ஆமீர்

ஆமீர் கானிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். ஆமீர் சினிமாவை அதிகமாக விரும்புகிறார். சினிமாவின் அனைத்து விஷயங்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பார் என புகழ்கிறார் பாத்திமா.

திறமை

திறமை

ஆமீர் மிகவும் திறமையானவர், அறிவாளி. அவரின் திறமை, குணத்தில் 10 சதவீதத்தை நான் வெளிப்படுத்தினாலே எனது சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் வித்தியாசம் ஏற்படும் என பாத்திமா கூறியுள்ளார்.

English summary
Fathima Sana Shaikh who lived as Geeta Kumari Phogat in Dangal is none other than Kamal Haasan's daughter in Chachi 420.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos