போட்டோஸே எத்தனை நாளைக்கு பார்த்துட்டு இருப்பீங்க.. ரசிகர்களுக்காக மஜா வீடியோவை இறக்கிய தர்ஷா குப்தா
சென்னை: தென்னிந்திய சினிமா மற்றும் சின்னத்திரையில் பலரது கவனத்தை ஈர்த்த வளர்ந்து வரும் நடிகை தர்ஷா குப்தா. விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி, பிக் பாஸ் சீசன் 8 உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து வரும் தர்ஷா குப்தா இம்முறை தனது கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோ என இரண்டையும் பகிர்ந்துள்ளார்.
தர்ஷா குப்தா அடிப்படையில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். பொறியியல் படிப்பை முடித்துவிட்டு மாடலிங்கில் கவனம் செலுத்தி வந்த தர்ஷா குப்தா தனது கெரியரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்ற சீரியலில் இருந்து தொடங்கினார். அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப் பூவே, அவளும் நானும் உள்ளிட்ட தொடர்களில் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் அடுத்தடுத்து வாய்ப்புகள் சின்னத்திரையிலும், வெள்ளி திரைகளும் வந்து கொண்டே இருந்தது.
விஜய் டிவியை பொருத்தவரையில் தர்ஷா குப்தனுக்கு குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் என இரண்டிலும் அடுத்தடுத்து வாய்ப்புகளை வழங்கினர். குக் வித் கோமாளியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தர்ஷா குப்தா, பிக் பாஸில் வெகு சில வாரங்களே வீட்டுக்குள் இருந்தார் அதன் பின்னர் வெளியேறினார். திரைப்படங்கள் வெப் சீரிஸ்கள், சீரியல்கள் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் சரியாக பயன்படுத்தி மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் ரசிகர்கள்: இவருக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம். இன்னும் சொல்லப்போனால் சுமார் 23 லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் மற்றும் இணையதளவாசிகள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மாடலிங் புகைப்படங்கள் தொடங்கி மற்ற புரமோஷன் புகைப்படங்கள் வீடியோக்கள் தனது தனிப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து வருகிறார்.
கிளாமர் வீடியோ: அந்த வகையில் தர்ஷா குப்தா தற்போது தனது கிளாமரான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். எக்குதப்பாக சேலை கட்டிக்கொண்டு அவர் எடுத்த புகைப்படங்களை ஏற்கனவே பகிர்ந்து இருந்தார் அதற்கு அவரை பின்தொடரும் ரசிகர்கள் பலரும் லைக்குகளை வாரி வழங்கி கமெண்ட் செக்ஷனில் ஜொள்ளு வெடித்துக் கொண்டிருந்தனர்.
இப்படி இருக்கையில் எக்குத் தப்பாக சேலை கட்டி தான் எடுத்துக்கொண்ட வீடியோவையும் தர்ஷா குப்தா தற்போது பகிர்ந்துள்ளார். அதற்கு அவர் சேர்த்துள்ள பின்னணி பாடல் பலரையும் கவர்ந்துள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் எத்தனை நாளைக்குத்தான் போட்டோவையே பார்த்துட்டு இருப்பது என்று ஏங்கும் ரசிகர்களுக்காக தர்ஷா குப்தா தனது கிளாமர் வீடியோவைப் பகிர்ந்துள்ளார் என்று பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











