நான் தளபதி ரசிகை... ரோட்ல நான் மட்டும் தனியா போகணும்... டிடியின் விநோத ஆசை
சென்னை : தான் ஒரு தளபதி விஜய் ரசிகை என்று தெரிவித்துள்ளார் நடிகை திவ்ய தர்ஷினி.
விஜய்யை போலவே சைக்கிளில் அதிகாலை வேளையில் ஒரு ரவுண்ட் வந்துள்ளார் டிவி புகழ் திவ்யதர்ஷினி.
இதையொட்டி சைக்கிளில் செல்லும் அவர் கூடவே எதிரில் வரும் வாகனம் குறித்தும் காமெடியாக பதிவிட்டுள்ளார்.

பிசியான டிடி
நடிகை திவ்ய தர்ஷினி சினிமா மற்றும் டிவி நிகழ்ச்சிகள் என எப்போதும் தன்னை பிசியாக வைத்துக் கொள்பவர். நடிகர், நடிகைகளை இன்டர்வியூ எடுப்பது போன்ற நிகழ்ச்சிகளையும் காமெடியுடன் தொகுத்து வழங்குவார். இவரது நிகழ்ச்சிகளுக்கென்று ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.
Recommended Video

வீட்டருகே சைக்கிளிங்
தன்னுடைய உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொண்டுள்ளார் டிடி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி. இதையொட்டி அவர் தன்னுடைய வீட்டிற்கு அருகில் சைக்கிளிங் செய்துள்ளார். கியர் இல்லாத பழைய சைக்கிளில் தான் ரைட் செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் வீடியோவை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
Ayayiyoooooo bike varudu orama ponga 🤐🙏🤪😏
— DD Neelakandan (DhivyaDharshini) June 16, 2021
Dholuvula orey oru bike dan vandadu, potennnn parunga break ahhh…#cyclist #palayacycle #nogearcycle pic.twitter.com/ckb4xFgP3M
தளபதி ரசிகை
எதிரில் வரும் ஒரு பைக்கை ஓரமாக போக சொல்லி கெஞ்சுகிறார். தூரமாக பைக் வந்தாலும் போட்டேன் பாருங்க பிரேக்க என்று நகைச்சுவையுடன் கேப்ஷன் வெளியிட்டுள்ளார். தான் தளபதி ரசிகை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் முன்னாடி வண்டி வந்தா லைட்டா பயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நல்ல எக்சர்சைஸ்
ரோட்டில் அவர் மட்டும் தனியாக சைக்கிள் ஓட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார். மொத்தத்தில் ஒரு சைக்கிள் ஓட்ட இவ்வளவு அலப்பறைகளா என்று பார்ப்பவர்களை கேட்கத் தூண்டும் வகையில் டிடி சைக்கிள் ஓட்டி பழகியுள்ளார். அவருக்கு என்னவோ இதன்மூலம் நல்ல எக்சர்சைஸ் கிடைத்திருக்கும். ஆனால் எதிரில் வந்தவர்களுக்கு அவரால் டென்ஷன்தான்.


Click it and Unblock the Notifications











