DD: கல்யாண பொண்ணு மாதிரி மின்னும் டிடி திவ்ய தர்ஷினி.. ரசிகர்கள் கேட்ட முக்கியமான கேள்விகள் லிஸ்ட்

சென்னை: தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினி என்ற வார்த்தைக்கு தனி அடையாளம் கொடுத்த சிலரில் முதலில் நினைவுக்கு வருபவர் திவ்யதர்ஷினி என்ற டிடி. மேடையில் யார் வந்தாலும் சில நிமிடங்களில் அவர்களை இயல்பாக பேச வைப்பது, கலகலப்பாக நிகழ்ச்சியை கொண்டு செல்வது, அதே நேரத்தில் உணர்ச்சிகரமான தருணங்களிலும் திறமையாக கையாள்வது என பல திறமைகளால் ரசிகர்களின் மனதில் அழியாத இடத்தை பிடித்திருக்கிறார் டிடி.

திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்கள் மூலம் தனது பயணத்தை தொடங்கிய டிடி, பின்னர் விஜய் தொலைக்காட்சியின் முகமாகவே மாறினார். குறிப்பாக 'காஃபி வித் டிடி' நிகழ்ச்சி அவரை வேறு உயரத்திற்கு கொண்டு சென்றது. முன்னணி நடிகர்கள், நடிகைகள் முதல் இயக்குநர்கள் வரை பலரையும் தனது பேச்சுத் திறமையால் மனம் திறக்க வைத்த தொகுப்பாளினி என்ற பெருமையை அவர் பெற்றார். இன்று கூட பெரிய திரைப்பட விழாக்கள், இசை வெளியீட்டு விழாக்கள், பிரபலங்களின் சிறப்பு நிகழ்ச்சிகள் என்றாலே டிடியின் பெயர் முதலில் பரிசீலிக்கப்படும் அளவுக்கு அவர் தனது இடத்தை உறுதியாக தக்க வைத்திருக்கிறார்.

DD s Stunning Traditional Photoshoot Goes Viral Fans Can t Stop Praising Her Timeless Beauty

தனிப்பட்ட வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்தாலும், குறிப்பாக நீண்ட காலமாக கால்வலி மற்றும் உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டாலும், அதையெல்லாம் தாண்டி தொடர்ந்து மேடைகளில் உற்சாகமாக ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தான் டிடியை மற்றவர்களிடமிருந்து தனித்து நிறுத்துகிறது என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

மின்னும் டிடி: இந்நிலையில், தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை டிடி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தங்க நிற பட்டுப் புடவையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களில் அவர் கொடுத்துள்ள ஒவ்வொரு போஸும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மல்லிகைப்பூ, கோயில் நகைகள், கைகளில் வளையல்கள், எளிமையான மேக்கப் என முழுக்க முழுக்க பாரம்பரிய லுக்கில் தேவதையைப் போல காட்சியளிக்கிறார் டிடி.

DD s Stunning Traditional Photoshoot Goes Viral Fans Can t Stop Praising Her Timeless Beauty

ரசிகர்கள் கேள்வி: குறிப்பாக அவர் அணிந்திருந்த நெக்லஸ், ஜிமிக்கி, வளையல்கள் மற்றும் புடவையின் நிறத் தேர்வு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. "இவ்வளவு அழகான புடவை எங்க வாங்கினீங்க?", "நகை எந்த பிராண்டு?", "உங்களைப் பார்த்தாலே கல்யாண வீட்டு பொண்ணு மாதிரி இருக்கீங்க", "வயசே ஆகல போல", "இந்த லுக் செம கிளாஸ்" என்று ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

டிரெயின்: சமீபத்தில் நடைபெற்ற 'ட்ரெயின்' படத்தின் டீசர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் விஜே மாகாபா ஆனந்துடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார் டிடி. பல புதிய தொகுப்பாளர்கள் வந்தாலும், ஒரு நிகழ்ச்சியை சுறுசுறுப்பாகவும், மரியாதையுடனும், அதே நேரத்தில் ரசிக்கும்படியும் கொண்டு செல்லும் திறனில் டிடிக்கு போட்டியாக இன்னும் யாரும் வரவில்லை என்று ரசிகர்கள் கூறுவது மிகையல்ல.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X