ஹேட்டர்களுக்கு அந்த விரலை காட்டிய சோனாக்‌ஷி.. இனிமேல் வாயை பொத்திக் கொண்டு இருக்க மாட்டேன் என பளிச்!

மும்பை: ஜே.என்.யூ மாணவர்களுக்காக ஆதரவு கரம் நீட்டிய தீபிகா படுகோனேவுக்கு சல்யூட் செய்த சோனாக்‌ஷி சின்ஹா, மாணவர்கள் ரத்தம் ஒழுக நிற்பதை பார்த்துக் கொண்டு இனிமேல் யாரும் வாயை பொத்திக் கொண்டு இருக்க முடியாது என துணிச்சலாக பதிவிட்டுள்ளார்.

மேலும், சமூக வலைதளங்களில் தன்னை ட்ரோல் செய்து வரும் ஹேட்டர்களுக்கு ப்ளர் செய்யப்பட்ட நடுவிரல் போட்டோவை போட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

வலிமையாகும் நேரம்

இது வலிமையாகும் நேரம் என்ற கேப்ஷனுடன் தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு சோனாக்‌ஷி சின்ஹா வைரலாக்கினார்.

எதுவும் என்னை தடுக்காது

அதேபோன்று, மறைக்க எதுவுமே இல்லை, பயப்பட போவதில்லை, எதுவும் என்னை தடுக்காது என்ற கேப்ஷனுடன் புதிய போட்டோஷூட் புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களுக்கு தனது ஆழமான கருத்தை சொல்ல சோனாக்‌ஷி தயாராகி வந்தார்.

ட்ரோல்

ட்ரோல்

ஆனால், அவரது போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை பங்கமாக கலாய்த்து ட்ரோல் செய்தனர். தீபிகா படுகோனே ஜே.என்.யூ மாணவர்களுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார். நீங்க ஏன் இப்படி கவர்ச்சி போட்டோக்களையும், காமெடி கேப்ஷன்களையும் போடுறீங்க என கலாய்த்தனர்.

தீபிகாவிற்கு சல்யூட்

நீங்க எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். ஆனால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தலைகளில் வலியும் ரத்தம் உங்களை உருக்கவில்லை என்றால் அதை விட கொடுமையானது ஒன்றும் கிடையாது. தீபிகாவிற்கு சல்யூட். இது மெளனம் காப்பதற்கான நேரம் இல்லை என துணிச்சலாக ஒரு ட்வீட்டை சோனாக்‌ஷி போட்டுள்ளார்.

ஹேட்டர்களுக்கு ஸ்பெஷல் மெசேஜ்

சோனாக்‌ஷி அந்த பெயருக்கு அஸ்லி என பொருள். அஸ்லி என்றால் ஒரிஜினல், என்னுடைய ஹேட்டர்களுக்கு முத்தத்துடன் கூடிய ஸ்பெஷல் மெசேஜ் இதோ என ப்ளர் செய்யப்பட்ட நடுவிரலை காட்டியபடி எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு கெத்து காட்டியுள்ளார்.

சரியான பதிலடி

சோனாக்‌ஷி சின்ஹா பதிவிட்டுள்ள இந்த ட்வீட்டுக்கு ஆதரவுகளும், எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன. ஹேட்டர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளீர்கள் என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

போலீஸ்காரங்க ரத்தத்தை பார்க்கலையா?

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ரத்தத்தை பார்த்து கொதித்ததாக சொல்லும் நீங்க, ஏன் போலீஸ்காரங்க ரத்தத்தை மட்டும் கண்டுகொள்ளவில்லை என இந்த நெட்டிசன் சோனாக்‌ஷியிடம் சூடான கேள்வியை எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு டிக்கெட் எடுங்க

அரசுக்கு எதிராகவும் தீபிகா படுகோனேவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து உள்ளீர்கள், நீங்களும் பாகிஸ்தானுக்கு டிக்கெட் எடுக்க வேண்டியது தான் என இந்த ஹேட்டர் கிண்டல் செய்துள்ளார்.

நாங்க சப்போர்ட் பண்றோம்

தீபிகா படுகோனேவை தொடர்ந்து பாசிசத்திற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள உங்களுக்கு நாங்க சப்போர்ட் பண்றோம் என பல ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X