»   »  தனுஷுடன் இணைந்து நடிப்பதால் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.. அறிமுக நடிகை பூஜா ஜவேரி

தனுஷுடன் இணைந்து நடிப்பதால் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.. அறிமுக நடிகை பூஜா ஜவேரி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம் என்று அவருக்கு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் அறிமுக நடிகை பூஜா ஜவேரி.

பாலிவுட் நடிகையான பூஜா ஜவேரி தற்போது பிரபு சாலமனின் புதிய படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் பூஜா ஜவேரி, கீர்த்தி சுரேஷ் என்று 2 நாயகிகள் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தில் நடிப்பது குறித்து அவர் கூறும்போது "தனுஷுடன் இணைந்து நீங்கள் சில நிமிடங்களை செலவளித்தாலே அவரிடம் இருந்து ஏராளமான விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும்.

Debut Actress Pooja Jhaveri Talks About Dhanush

அவரின் அர்ப்பணிப்பு, ஆளுமை மற்றும் நடிப்புத் திறமை ஆகியவை என்னைக் கவர்ந்தது. முதல் படத்திலேயே பிரபு சாலமன், தனுஷ் ஆகிய 2 பெரிய ஜாம்பவான்களுடன் இணைந்து வேலை பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்திருக்கிறது.

எல்லோருடைய அறிமுகமும் இப்படி இருக்காது என்பதால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக என்னை உணர்கிறேன். மேலும் பிரபு சாலமன் பலமுறை ஒத்திகை பார்த்த பின்னரே படப்பிடிப்பிற்கு செல்கிறார்.

இதனால் நடிப்பது இயல்பான ஒன்றாக இருக்கிறது" இவ்வாறு பூஜா ஜவேரி தெரிவித்திருக்கிறார். அடுத்ததாக நடிகர் அதர்வா முரளியின் ருக்குமணி வண்டி வருது படத்தில் கிராமத்துப் பெண்ணாக பூஜா ஜவேரி நடிக்கவிருக்கிறார்.

Read more about: dhanush, தனுஷ்
English summary
"A lot of Things that can be Learned from Actor Dhanush" Debut Actress Pooja Jhaveri says in Recent Interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil