»   »  நெஞ்சிருக்கும் வரை தீபா!

நெஞ்சிருக்கும் வரை தீபா!

Subscribe to Oneindia Tamil

பஞ்சாப் குதிரை தீபாவை நாயகியாக வைத்து நெஞ்சிருக்கும் வரை என்ற புதியபடத்தை இயக்கவுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

மகன் விஜய் தலையெடுத்து இளைய தளபதியாக மாறுவதற்கு முன்பு வரைஅவ்வப்போது படங்களை இயக்கி வந்தார் எஸ்.ஏ.சி. ஆனால் விஜய் டாப்ஹீரோக்களில் ஒருவராக மாறிய பின்னர் இயக்கத்தைக் குறைத்துக் கொண்டார்.

இருந்தாலும் திடீர் திடீரென ஏதாவது படத்தை இயக்கி பாக்ஸ் ஆபிஸில் குண்டைப்போட்டு வந்தார். கடைசியாக அவர் இயக்கிய படம் சுக்ரன். சின்னப் பையன் ரவிகிருஷ்ணாவை ஹீரோவாக வைத்து அவர் இயக்கிய சுக்ரன், பாடல்களுக்காககொஞ்சம் நாள் ஓடியது.


இப்போது அடுத்த படத்திற்கு ரெடியாகி விட்டார் எஸ்.ஏ.சி. இப் படத்திற்கு சிவாஜிநடித்து பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நெஞ்சிருக்கும் வரை என்றடைட்டிலை வைத்துள்ளார். சித்திரம் பேசுதடி புகழ் நரேன் தான் நாயகன்.

படத்தில் ஹீரோயினாக நடிக்க விருப்பது பஞ்சாபிலிருந்து வந்துள்ள கோதுமை தீபா.படு க்யூட்டாக இருக்கும் தீபாவுக்கு இது தமிழில் முதல் படம் என்றாலும், முத்தானஇயக்குனரின் இயக்கம் என்பதால் படு சத்தாக நடிக்க காத்திருக்கிறார்.

தெலுங்கில் சில படங்களில் தலைகாட்டியிருக்கிறார் தீபா.


வழக்கமான காதல் கதையிலிருந்து சற்றே விலகி படு வித்தியாசமான கதைப்பின்னணியுடன் இப்படம் அமைந்துள்ளது. எனது மனைவி ஷோபாதான் கதையைஎழுதியுள்ளார். நிச்சயம் இப்படம் பெரும் வெற்றிப்படமாக அமையும் என்கிறார்எஸ்.ஏ.சி.

படத்தில் ஏகப்பட்ட பெரிய தலைகளும் உள்ளன. நாசர், தலைவாசல் விஜய், ஸ்ரீமன்,கஞ்சா கருப்பு, சார்லி, லிவிங்ஸ்டன், பிதாமகன் மகாதேவன் என லிஸ்ட் நீளுகிறது.கண்டிப்பாக குத்துப் பாட்டும் உண்டாம்.

புரோட்டா பாட்டுப் புகழ் "ஸ்ரீகாந்த் தேவா தான் இசையமைக்கிறார். அருமையான 6பாடல்களை ஏற்கனவே போட்டுக் கொடுத்து விட்டாராம். அத்தனையும் லட்டு மாதிரிவந்திருக்கிறதாம்.


சுக்ரன் படத்தில் விஜய் கெஸ்ட்டாக தலைகாட்டியது போல நெஞ்சிருக்கும்வரையிலும் யாராவது ஒரு முக்கிய நடிகரை கெஸ்ட்டாக நடிக்க வைக்கவுள்ளாராம்எஸ்.ஏ.சி. அவர் யார் என்பதை மட்டும் ரகசியமாக வைத்திருக்க முடிவுசெய்துள்ளாராம்.
Read more about: deepa in tamil films

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil