»   »  லகலக தீபிகா!

லகலக தீபிகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொழுக் மொளுக் என்று படு கலக்கலாக இருக்கிறார் கமல தீபிகா.

இந்த தளுக் தளுக் கலம தீபிகா நடிக்கும் படம் மிஸ்டர் அண்ட் மிஸஸ். இந்தப்படத்தின் பெயரை இப்போது சுத்தத் தமிழில் நிழல் என்று மாற்றி விட்டனராம். பத்ரிதான் நாயகன். புதுமுகமாக அறிமுகமாகிறார் கமல தீபிகா.

தீபிகா, மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றவராம். எனவே அழகோடு, அளவாகவும்உள்ளார். கச்சித கன்னியாக இருக்கும் கமல தீபிகா, இந்தப் படம் மூலம் தமிழ்ரசிகர்களை கவர வருகிறார்.

படத்தின் கதை ரொம்ப சாதாரணமானது தான். உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும்ஒருவரைக் கொன்று விட்டு அப்பாவி நாயகன் மீதும் அவனது நண்பர்கள் மீதும்பழியை தள்ளி விடுகிறார்கள்.

சட்டத்தின் தண்டனைக்கும் ஆளாகிறார்கள். அங்கிருந்து தப்பி வரும் நாயகன்,உண்மைக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துகிறாராம்.

இப்படத்தில் கமல தீபிகாவுக்கு அட்டகாசமான கேரக்டர். விளம்பர நிறுவனம் ஒன்றில்பணியாற்றுகிறாராம். அதே நிறுவனத்தில் தான் பத்ரியும் வேலை பார்க்கிறாராம்.அடுத்து என்ன காதல் தானே, அதேதான் நடக்கிறது. இந்த நேரத்தில்தான் காதலனைபோலீஸ் பிடித்துப் போய் விட பாப்பா நீங்க நல்லவரா, கெட்டவரா என்று நாயகன்கமல்ஹாசன் போல குழம்பிப் போகிறார் தீபிகா.

படம் முழுக்க அடியும், வெட்டும், குத்தும் நிறைய இருக்கிறதாம். அதே சமயம், தீபிகாஅவ்வப்போது ஐஸ் கட்டி போல வந்து குளிர்ச்சிப்படுத்துகிறாராம். கானா சுந்தர் தான்படத்திற்கு இசை. பாடல்களை தேன்மொழி, முத்துமகன் ஆகியோர் தீட்டியுள்ளனர்.கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி இயக்கியும் இருப்பவர் சாட்சாத் பத்ரியே தான்.

கமல தீபிகாவை பார்ப்பதற்காகவே இந்தப் படத்தை எதிர்பார்க்கலாம்.

Read more about: kamala deepika in nilal

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil