பறக்கும், பந்து பறக்கும், டொக்: பெடரருடன் டென்னிஸ் ஆடிய தீபிகா
டெல்லி: டெல்லியில் சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக் போட்டிகள் துவங்கும் முன்பு நடந்த மாதிரி போட்டியில் நடிகர் ஆமீர் கான், நடிகை தீபிகா படுகோனே ஆகியோர் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரருடன் சேர்ந்து விளையாடினர்.
சர்வதேச பிரீமியர் டென்னீஸ் லீக் போட்டிகளில் விளையாட டென்னிஸ் வீரர்கள் ரோஜர் பெடரர், நோவாக் ஜோகோவிச் உள்ளிட்டோர் இந்தியா வந்துள்ளனர். போட்டிகள் துவங்கும் முன்பு டெல்லியில் திங்கட்கிழமை மாதிரி போட்டி நடைபெற்றது.
அதில் பெடரர், ஜோகோவிச்சுடன் சேர்ந்து பாலிவுட் பிரபலங்கள் விளையாடினர்.

தீபிகா படுகோனே
பிரபல முன்னாள் பேட்மிண்டன் வீரரான பிரகாஷ் படுகோனேவின் மகளும், நடிகையுமான தீபிகா படுகோனே ரோஜர் பெடரருடன் சேர்ந்து ஜோகோவிச், சானியா மிர்சா ஜோடியை எதிர்த்து விளையாடினார்.

ஆமீர் கான்
ஆமீர் கானும் பெடரருடன் சேர்ந்து ஜோகோவிச், சானியா ஜோடியை எதிர்த்து டென்னிஸ் விளையாடினார்.

அக்ஷய்
மாதிரி போட்டியில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், ரித்தேஷ் தேஷ்முக் ஆகியோரும் விளையாடினர்.

நடனம்
முன்னதாக டெல்லியில் உள்ள இந்திரா காந்தி அரங்கில் கொக்க கோலா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்து நிகழ்ச்சியில் பெடரர் தீபிகா, அமிதாப் பச்சனுடன் சேர்ந்து நடனம் ஆடினார்.


Click it and Unblock the Notifications











