அதான் கல்யாணம் ஆகிடுச்சுல, அந்த மூன்றையும் செய்யக் கூடாது: கணவருக்கு தீபிகா தடா
மும்பை: திருமணத்திற்கு பிறகு 3 விஷயங்களை செய்ய கணவர் ரன்வீர் சிங்கிற்கு தடை விதித்துள்ளாராம் நடிகை தீபிகா படுகோனே.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனேவும் 6 ஆண்டுகள் காதலித்த பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இத்தாலியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு இருவரும் அவரவர் படங்களில் பிசியாகிவிட்டனர். இந்நிலையில் ரன்வீர் தன் மனைவி பற்றி கூறியிருப்பதாவது,

திருமணம்
திருமணத்திற்கு பிறகு எதுவும் மாறிவிடவில்லை. என் வாழ்வில் நடந்த நல்ல விஷயம் என்றால் அது தீபிகாவை திருமணம் செய்தது தான். அனைத்து முடிவு எடுக்கும் பொறுப்பை தீபிகாவிடம் விட்டுவிட்டேன். அதில் அவர் கில்லாடி.

வீடு
திருமணத்திற்கு பிறகு 3 விஷயங்களை செய்ய தடை விதித்துள்ளார் தீபிகா. வீட்டிற்கு லேட்டாக வரக் கூடாது, சாப்பிடாமல் வெளியே செல்லக் கூடாது, போன் செய்தால் அதை மிஸ்டு காலாக்கக் கூடாது என்று தீபிகா கறாராக தெரிவித்துள்ளார். எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டது என்பதை நினைத்தாலே மகிழ்ச்சியாக உள்ளது.

அழகு
என் மனைவி மிகவும் அழகு. அவருக்கு சுத்திப் போட வேண்டும். தூங்கும்போது கூட அவர் மிகவும் அழகாக உள்ளார். 6 ஆண்டுகளாக அவருடன் உள்ளேன். அவர் விழித்திருந்தாலும் சரி, தூங்கினாலும் சரி அழகோ அழகு. அவரை பற்றி நினைத்தாலே மகிழ்ச்சியாக உள்ளது.

பொறுப்பு
தீபிகா ஒரு பொறுப்பான மனைவி. அவர் படங்களில் நடிப்பதுடன் வீட்டையும் பார்த்துக் கொள்கிறார். அவர் என் வாழ்க்கையை அழகாக்கிவிடுவார் என்று எனக்கு தெரியும். அவர் அவராக இருப்பது எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்கிறார் ரன்வீர் சிங்.


Click it and Unblock the Notifications











