ரூ.15 கோடி கேட்ட தீபிகா படுகோனே, கத்ரீனா கைஃப்: தெறித்து ஓடிய தயாரிப்பாளர்
மும்பை: தீபிகா படுகோனே மற்றும் கத்ரீனா கைஃப் ஒரு படத்தில் நடிக்க ரூ.15 கோடி கேட்டதால் தயாரிப்பாளர் ஒருவர் தெறித்து ஓடியுள்ளார்.
பாலிவுட் நடிகைகள் தங்களின் படங்கள் ஹிட்டாகிவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக சம்பளத்தை ஏற்றிவிடுவார்கள். இது அவர்களுக்கு மட்டும் அல்ல அனைத்து உட் நடிகைகளுக்கும் பொருந்தும்.
இந்நிலையில் ஒரு தயாரிப்பாளர் 2 நடிகைகள் கேட்ட சம்பளத்தை அறிந்து அதிர்ந்துவிட்டார்.

கத்ரீனா
பேய் படம் ஒன்றை எடுத்து அதை ஹிட்டாக்கிய பாலிவுட் தயாரிப்பாளர் அதன் இரண்டாம் பாகத்தில் தீபிகா படுகோனே அல்லது கத்ரீனா கைஃபை நடிக்க வைக்க விரும்பினார்.

சம்பளம்
கத்ரீனாவும், தீபிகாவும் ஒரு படத்தில் நடிக்க ரூ.15 கோடி கேட்கிறார்கள் என்ற செய்தியை கேட்ட உடனேயே தயாரிப்பாளர் அவர்களை சந்திக்காமல் கூட சென்றுவிட்டாராம்.

ஆலியா
ஆலியா பட் வளர்ந்து வரும் நாயகி என்பதால் படம் ஒன்றுக்கு ரூ. 3 கோடி வாங்குகிறார். அதனால் அவரை அல்லது ஷ்ரத்தா கபூரை அந்த தயாரிப்பாளர் தனது படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்.

விஜய்
தீபிகா படுகோனேவை இளைய தளபதி விஜய்க்கு ஜோடியாக்க முயற்சி நடந்தது என்று செய்திகள் வெளியாகின. அவர் ஒரேயடியாக சம்பளம் கேட்டதால் தான் அவரை ஜோடியாக்கும் முயற்சி கைவிடப்பட்டதாம்.


Click it and Unblock the Notifications











