‘சென்னை எக்ஸ்பிரஸ்’க்காக தமிழ் படித்த தீபிகா படுகோனே
மும்பை: சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்காக ஹிந்தி நடிகையான தீபிகா படுகோனே தமிழ் கற்றுக் கொண்டாராம்.
ரோஹித் ஷெட்டி இயக்கத்தில், ஷாரூக் ஹீரோவாக நடித்துள்ள படம் 'சென்னை எக்ஸ்பிரஸ்'. தீபிகா படுகோனே இப்படத்தின் ஹீரோயின்.
கதைப்படி, தந்தையின் இறுதிக் காரியம் செய்வதற்காக ராமேஸ்வரம் வரும் ஷாரூக், தமிழ்ப்பெண்ணான தீபீகாவைக் காதலிக்கிறார். பின்னர் அதனைத் தொடர்ந்து ஏற்படும் சம்பவங்களே படத்தின் மீதிக் கதை.

தமிழ்ப்பேசு...
படத்தில், தமிழ்ப் பெண்ணாக வருவதால் கட்டாயம் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டாராம் தீபிகா.

ஓ...ப்ரியா
கதைப்படி, தீபிகாவின் பெயர் ப்ரியா. ஆனால், தமிழ் கற்றுக் கொள்வது தீபிகாவிற்கு அவ்வளவு சுலபமாக இருக்கவில்லையாம்.

சமாளிப்பிக்கேஷன்...
பாவாடை தாவணி கட்டிக் கொண்டு தமிழ்ப் பெண்ணாக நடித்ததைவிட, தமிழ் உச்சரிப்புகள் தான் கடினமாக இருந்ததாம் தீபிகாவிற்கு. ஒரு வழியாக சமாளித்து நடித்தாராம்.

அனுபவப்பாடம்...
இது குறித்து தீபிகா கூறுகையில், ‘பெங்களூரில் நான் பெற்ற தமிழர்கள் பேசும் அனுபவத்தை வைத்து நான் தமிழ் கற்றுக் கொண்டேன்' எனத் தெரிவித்துள்ளார்.

ரஜினி நாயகி...
ரஜினியின் அடுத்த படத்தில் தீபிகா தான் ஹீரோயின் என்பது ஏற்கனவே நாமறிந்த ஒன்று தான். எனவே, அவர் கற்றுக் கொண்ட ‘தமிழ்' நிச்சயம் அவரைக் கை விடாது.


Click it and Unblock the Notifications











