சிம்பு படத்தில் விஜய்க்கு ஜோடி 'கோச்சடையான்' நாயகி?
சென்னை: சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
ஜில்லா படத்தை முடித்துவிட்டு ஜில்லென்று இருக்கும் விஜய் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் நடிக்கிறார். தற்போது அவர் ஜில்லா வெற்றிக்களிப்பில் உள்ளார்.
அடுத்த மாதம் பிறந்தவுடன் மீண்டும் படப்பிடிப்புக்கு கிளம்பிவிடுவார்.

சமந்தா
வரும் 3ம் தேதி துவங்கும் ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இவர்கள் ஜோடி சேர்ந்து நடிப்பது இதுவே முதல் முறை ஆகும்.

சிம்புதேவன்
முருகதாஸ் படத்தில் நடிக்கும்போதே வரும் ஜூலை மாதம் முதல் விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இம்சை அரசன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சிம்பு நிச்சயம் விஜய்க்கு ஒரு வித்தியாசமான கதையை தான் தயார் செய்து வைத்திருப்பார்.

தீபிகா?
சிம்புதேவன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. அதனால் ஹீரோயின் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கோடிகள்
தீபிகா படுகோனே இரண்டு நாட்கள் கோச்சடையானில் நடிக்கவே ரூ.3 கோடி வாங்கினார். சிம்புதேவன் படத்தில் நடிக்க வேண்டும் என்றால் எத்தனை கோடியை சம்பளமாக கேட்பாரோ தெரியவில்லையே.


Click it and Unblock the Notifications











