ரஜினியுடன் நடித்த அனுபவம்... புல்லரிக்கும் தீபிகா படுகோன்

மேலும் இந்தியாவிலிருந்து வெளியாகும் முதல் சர்வதேசப்படம் என்ற பெருமை ரஜினியின் கோச்சடையானுக்கு கிடைக்கும் என்கிறார் அம்மணி.
ரஜினி, தீபிகா படுகோனே ஜோடியாக நடித்த 'கோச்சடையான்' படம் விரைவில் ரிலீசாக உள்ளது. டப்பிங், ரீரிக்கார்டிங் போன்ற இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
படத்தின் நாயகி தீபிகா சமீபத்தில் அளித்த பேட்டியில், ரஜினியுடன் நடித்தது குறித்து குறிப்பிட்டிருந்தார். 'ரஜினியுடன் நடித்தது மறக்க முடியாத இனிய அனுபவம்' என்றார் அவர்.
மேலும் அவர் கூறுகையில், "ரஜினி படப்பிடிப்பு அரங்குக்குள் நுழையும்போதே தெம்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார். தொழில் மீது அவருக்கு இருக்கும் அர்ப்பணிப்பை அவரது கண்களிலேயே காண முடியும். உடல் நிலை பாதிக்கப்படுவதற்கு முன்பு எந்த அளவு ஈடுபாட்டுடன் இருந்தாரோ அதே அளவு ஈடுபாட்டுடன் இப்போதும் இருக்கிறார். அதில் கொஞ்சம்கூட குறையவில்லை," என்றார்.


Click it and Unblock the Notifications











