செட்டில்மென்ட் பஞ்சாயத்தெல்லாம் ஓவர் போல.. மீண்டும் கல்கி படத்தை புரமோட் செய்ய ஆரம்பித்த தீபிகா!
ஹைதராபாத்: நடிகை தீபிகா படுகோன் தனது சோசியல் மீடியா பக்கங்களில் கல்கி படத்தை மீண்டும் புரமோட் செய்ய ஆரம்பித்துள்ளார். கல்கி படத்தின் புஜ்ஜி கார் டீசர் அறிமுகத்தை கூட தனது சோசியல் மீடியா பக்கத்தில் தீபிகா படுகோன் ஷேர் செய்யாமல் இருந்தது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தெலுங்கில் உருவாகும் படங்களில் தொடர்ந்து பாலிவுட் நடிகைகள் நடித்து வருகின்றனர். ஆனால், படம் வெளியாகும் சமயத்தில் திடீரென புரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்க மறுத்து வருகின்றனர்.

ஆர்ஆர்ஆர் படத்தையே கடைசி நேரத்தில் ஆலியா பட் புறக்கணித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ரன்பீர் கபூர், ஆலியா பட்டின் பிரம்மாஸ்திரம் படத்துக்காக ராஜமெளலி பல நாட்கள் புரமோஷனுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
கண்டுக்காத தீபிகா: ஆனால், ராஜமெளலி தன்னுடைய சீதா கதாபாத்திரத்தை குறைத்து விட்டார் என்கிற கோபத்தில் ஆலியா பட் ஆர்ஆர்ஆர் படம் வெளியாகி ஆஸ்கர் சென்ற போது கூட கண்டுக்கவே இல்லை. அதே போல தற்போது நடிகை தீபிகா படுகோனும் இந்த ஆண்டு முழுவதுமே கல்கி 2898 ஏடி படத்தை கண்டுக்காமல் இருந்து வந்தார்.
மீண்டும் புரமோஷன்: இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கல்கி படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு விரைவில் படத்தின் டிரெய்லர் வழியாக போவதாக நடிகை தீபிகா படுகோன் சோஷியல் மீடியாவில் புரமோஷன் செய்துள்ளார்.
அதுதான் பிரச்சனையா?: தீபிகா படுகோன் நடித்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென இன்னொரு ஹீரோயினாக திஷா பதானியை படத்துக்குள் நாக் அஸ்வின் கொண்டு வந்தார். அதன் பின்னர் இத்தாலி உள்ளிட்ட இடங்களுக்கு அவருடனே பிரபாஸ் சென்று நடித்து வந்த நிலையில், தீபிகாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதனால், ஏற்பட்ட ஈகோ பிரச்சனை காரணமாக கல்கி படத்தை கண்டுக்காமல் விட்டாரா? என்கிற கேள்விகள் எழுந்தன.

சம்பள பிரச்சனை: அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என்றும் தீபிகா படுகோனுக்கு அறிவித்த சம்பளத்தை தயாரிப்பு நிறுவனம் சரியாக கொடுக்கவில்லை என்பதுதான் பிரச்சனை என்றும் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கின. இந்நிலையில், படம் ரிலீஸ் ஆக நெருங்கிய நேரத்தில் அனைத்து பிரச்சனைகளையும் முடித்துவிட்ட நிலையில் தான் தீபிகா படுகோன் தனது சோசியல் மீடியாவில் கல்கி படம் குறித்த புரமோஷனை ஆரம்பித்துள்ளார் எனக் கூறுகின்றனர். பாலிவுட்டின் முன்னணி நடிகையாக விளங்கும் தீபிகா படுகோன் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏடி படத்தில் நடித்துள்ளார். வரும் ஜூன் 10ம் தேதி பிரம்மாண்டமாக டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
விரைவில் அம்மா: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்துக் கொண்ட தீபிகா படுகோன் கர்ப்பமாக உள்ளார். விரைவில் அம்மாவாகப் போகும் தீபிகா படுகோன் கல்கி படத்தில் அட்டகாசமாக ஆக்ஷன் காட்சிகளில் எல்லாம் நடித்துள்ளார். கல்கி படம் தீபிகா படுகோனுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தி பெல்ட்டில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்த அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானியை நாக் அஸ்வின் நடிக்க வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











