ஆண்ட்ரியாவைப் போல் பாதிக்கப்பட்டு தைரியமாக உண்மையை சொன்ன நடிகை தீபிகா படுகோன்!

Recommended Video

MeeToo Andrea : ஆண்ட்ரியாவை கொடுமைப்படுத்திய நடிகர்- வீடியோ

மும்பை: நடிகை ஆண்ட்ரியாவை போல் நடிகை தீபிகா படுகோனும் தற்போது ஒரு உண்மையை தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் தீபிகா படுகோன், தமிழிலும் நடித்துள்ளார்.

தமிழில் நடிகர் ரஜினிகாந்துடன் கோச்சடையான் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். இவர் நடிப்பில் பல எதிர்ப்புகளுக்கு இடையே வெளியான பத்மாவத் படம் பெரும் வெற்றி பெற்றது.

படங்களில் நடிக்கவில்லை

படங்களில் நடிக்கவில்லை

தீபிகா படுகோன் அண்மையில் சக நடிகரான ரன்வீர் சிங்கை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தீபிகா புதிய படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார்.

தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, தீபிகா படுகோன் கடந்த சில மாதங்களாக மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. தற்போது தீவிர சிகிச்சைக்குப் பிறகு மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார் தீபிகா.

உரிய நேரத்தில் சிகிச்சை

உரிய நேரத்தில் சிகிச்சை

இதுதொடர்பாக பேசிய அவர், மன அழுத்த நோய் யாருக்கு வேண்டுமானலும் வரும் என்றார். மன அழுத்த நோய்க்கு ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லை என்று கூறிய அவர், மன அழுத்தத்திற்கு உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் குணமடையலாம் என்றும் தீபிகா படுகோன் தெரிவித்தார்.

ஒவ்வொரு நிமிடமும் போராட்டம்

ஒவ்வொரு நிமிடமும் போராட்டம்

மன அழுத்த நோய் ஏற்பட்டவர்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் போராட்டமாகவே இருக்கும் என்றும் தொடர்ந்து மன சோர்வு ஏற்படும் என்றும் தனக்கான பாதிப்பை விளக்கினார் தீபிகா. மேலுல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால் வேலையில் கவனம் வராது என்றும் சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பார்கள் என்றும் கூறினார்.

ஆண்ட்ரியா பாதிப்பு

ஆண்ட்ரியா பாதிப்பு

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ள தீபிகா படுகோன் தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதை தைரியமாக சொல்லியுள்ளார். அண்மையில் நடிகை ஆண்ட்ரியா திருமணம் ஆன நண்பருடன் கொண்ட தவறான உறவால் தான் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் அதற்காக ஆயுர்வேத சிகிச்சை பெற்றதாகவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X