Deepika Padukone - கர்ப்பமாக இருப்பதை அறிவித்த தீபிகா படுகோன்.. குழந்தை எப்போ பிறக்கப்போது தெரியுமா?
மும்பை: கடந்த 2018ம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் திருமணம் செய்துக் கொண்டனர். திருமணமான 6 ஆண்டுகளாக சினிமாவில் பிசியாக இருந்து வந்த இருவரும் தற்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவுக்கு வந்த நிலையில், நடிகை தீபிகா படுகோன் கர்ப்பமாகி உள்ளார். ஏற்கனவே அவர் கர்ப்பமாகி உள்ளார் என்கிற தகவல்கள் கசிந்த நிலையில், தற்போது ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனும் லீப் இயர் டேவில் அந்த சந்தோஷமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
2013ம் ஆண்டு வெளியான ராம் லீலா படத்தில் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் இருவரும் இணைந்து நடித்தனர். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இருவரும் ரகசியமாக டேட்டிங் செய்ய ஆரம்பித்தனர்.

காதல் திருமணம்: 2012ம் ஆண்டு அந்த படத்தின் சூட்டிங் ஆரம்பித்ததில் இருந்தே இருவருக்கும் இடையே பற்றிக் கொண்ட காதல் தீ 2018ம் ஆண்டு ஊர் அறிய திருமணத்தில் வந்து முடிந்தது. பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத், சர்க்கஸ், 83 உள்ளிட்ட பல படங்களில் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் இணைந்து நடித்துள்ளனர். தீபிகா படுகோன் திருமணத்திற்கு பிறகு தான் பாலிவுட்டில் நடிகைகளுக்கு எல்லாம் திருமணத்தை செய்துக் கொள்ளும் ஆசை ஏற்பட்டு தொடர்ந்து பல நடிகைகள் திருமணம் செய்துக் கொண்டு சினிமாவையும் தொடர்ந்து வருகின்றனர்.
கல்யாணத்துக்குப்பின் படுகவர்ச்சி: திருமணத்துக்குப் பிறகு கொஞ்சம் அடக்கி வாசித்து நடித்து வந்த தீபிகா படுகோன் திடீரென கடந்த ஆண்டு ஷாருக்கான் உடன் இணைந்து பதான் படத்தில் உச்சகட்ட கவர்ச்சியில் டூபீஸ், சிங்கிள் பீஸ் உடைகளை உடுத்தி நடித்து அசத்தினார். இந்த ஆண்டு வெளியான ஃபைட்டர் படத்திலும் ஹ்ரித்திக் ரோஷனுடன் பீச்சில் சூட்டை கிளப்பி இருந்தார். பிரபாஸின் கல்கி படத்திலும் தீபிகா படுகோன் தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபிகா படுகோன் கர்ப்பம்: நடிகை தீபிகா படுகோன் புதிதாக எந்தவொரு படங்களிலும் கடந்த சில மாதங்களாக புதிதாக கலந்துக் கொள்ளவில்லை. மேலும், வெளிநாட்டு வெப் ஷோ ஒன்றிலும் அதன் புதிய சீசனில் அவர் பங்கேற்கவில்லை. இதை வைத்தே தீபிகா படுகோன் கர்ப்பமாகி விட்டார் என தகவல்கள் வெளியான நிலையில், பிப்ரவரி 29ம் தேதியான லீப் இயர் நல்ல நாளில் தான் கர்ப்பமான விஷயத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அமலா பால், தீபிகா படுகோன், யமி கவுதம் உள்ளிட்ட பல நடிகைகள் இந்த ஆண்டு அம்மாவாக போகின்றனர்.
குழந்தை பிறக்கும் மாதம்: நடிகை தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தை பிறக்கப் போகும் போட்டோவை வெளியிட்டு செப்டம்பர் 2024 எனக் குறிப்பிட்டுள்ளனர். குட்டி தீபிகா படுகோன் வரப் போகிறதா அல்லது குட்டி ரன்வீர் சிங்கா என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். விரைவில் பிரம்மாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தவும் ரன்வீர் சிங் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விருதே கிடைக்கல: பதான் படத்தில் கவர்ச்சி ஆக்ஷனில் கலக்கிய தீபிகா படுகோன் ஜவான் படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், ஆலியா பட் மற்றும் நயன்தாராவுக்குத்தான் விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தீபிகா படுகோனை யாரும் கண்டுக்கொள்ளவே இல்லை.


Click it and Unblock the Notifications











