கோச்சடையானுக்காக விட்ட படத்தில் மீண்டும் நடிக்கும் தீபிகா
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கோச்சடையானில் ஜோடி சேர தான் நடித்துக் கொண்டிருந்த இந்தி படம் ரேஸ் 2வில் இருந்து திடீர் என்று வெளியேறினார். இதனால் கடுப்பான படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் தாராணி தீபிகா மீது சிஐஎன்டிஏஏவில் புகார் கொடுத்தார். இது குறித்து வாய் திறக்காமல் தீபிகாவும் பிடிவாதமாக இருந்தார்.
என்ன ஆனாலும் சரி, அவர் எனது படத்தில் நடித்தேயாக வேண்டும் என்று ரம்ஷே தெரிவித்தார். பிரச்சனை பெரிதாவதை உணர்ந்த தீபிகா இறுதியாக படிந்துவிட்டார். பாதியில் விட்டுவிட்டு வந்த படத்தை முடித்துக் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளார். அம்மணி படிந்ததற்கு காரணம் ரேஸ் 2வில் நடிக்க மாட்டேன் என்று தொடர்ந்து அடம் பிடித்தால் தயாரிப்பாளருக்கு பெரிய தொகையை நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டி வரும் என்பது தான்.
இந்நிலையில் கோச்சடையான் படத்தின் கால்ஷீட் பாதிக்காத அளவுக்கு ரேஸ் 2 பட கால்ஷீட் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறாராம். அதனால் அந்த படத்திற்கு ஒரு சில கன்டிஷன்கள் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications












